பக்கம்:நவமணி இசை மாலை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு முக்கிய வேண்டுகோள் இசையைப் பற்றிய எனது கருத்துக்களை நான் முன்பு வெளியிட்டுள்ள இசைமணி மஞ்சரி, முருகன் அருள்மணி மாலை கீர்த்தனை அமுதம் என்ற மூன்று நூல்களிலும் எழுதியுள்ளேன். இசை வகுப்பதில் எனக்கு உதவி செய்தவர்களைப் பற்றியும் விரிவாகக் கூறியிருக்கிறேன். அவற்றையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ளுமாறு சங்கீத வித்வான்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு பாடலின் இசை அமைப்பை மாற்ருமல், ஆனால் அதைப் போஷித்தும், மெருகிட்டும் பாடுவதாலேயே அப்பாடல் மேலும் மேலும் சிறப்படையும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார் கள். ஆதலால் அவ்வாறே இந்த மூன்று நூல்களிலும் உள்ள பாடல்களைக் கையாள வேண்டுமாய் சங்கீத வித்வான்களே வேண்டிக்கொள்கிறேன். இந்த மூன்று நூல்கள் வெளியாவதற்கு முன்பே. அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் வெளியான எனது இரண்டு தமிழிசைப் பாடல் தொகுதிகளும், அல்லயன்ஸ் கம்பெனியார் வெளியிட்ட இசைமணி மாலை என்ற நூலும், சென்னைத் தமிழிசைச் சங்கம் வெளியிட்ட கீர்த்தனை மஞ்சரி என்ற நூலும் கைவசம் இல்லை. ஆனல் அவற்றிலுள்ள பெரும்பாலான உருப்படிகள் நன்கு திருத்தி அமைக்கப் பெற்றும், இசையிலும் மாறுதல்கள் செய்யப்பெற்றும் இந்த நான்கு ஆண்டுகளில் வெளியான புதிய கீர்த்தனை நூல்கள் நான்கிலும் சேர்க்கப் பட்டுள்ளன. ஆதலால் பழைய பிரதிகளை வைத்திருப்பவர்களும் இந்த நான்கு புதிய நூல்களில் உள்ளவாறே பாடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பழைய பிரதிகளைப் பின்பற்றிப் பாடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன். பெரியசாமித்தூரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவமணி_இசை_மாலை.pdf/8&oldid=776935" இலிருந்து மீள்விக்கப்பட்டது