பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 பொன்: வியாபாரம்ன நல்லதும் உண்டு.கெட்டதும் உன்டு. ஊத்துன பாலுக்கு பணம். பணம் இல்லேன்ன பல்லே காட்டி கெஞ்ச வேண்டியதுதான். இதுல என்ன படாடோபம் வேண்டியிருக்கு. காமா: நான் பணம் கூட கேட்குல... இன்னைக்கு இல்கேன்ன நாளைக்கு வாங்கிக்குறேன்... ஆன. நான் கிழிச்ச கோட்டையெல்லாம் அழிச்சிபுட்டு, தப்புக் கணக்கு சொல்ருங்க. மீறி கேட்டா எங்க நோட்டுக் கணக்கு தப்பான்னு நோட்டை தூக்கி எறியுருங்க. அது...என் மூஞ்சியில் எறியுற மாதிரி இருக்குது. பொன்: கணக்கை அக்கம் பக்கம் காட்டு,ை அவமானம் தாங்காம...சே. தப்பு செய்யறதுக்கும் ஒரு அளவே இல்லியா... காமா: என் நாயகம் எப்பவுமே தப்பாது. யானை மாதிரி, நாபக சக்தி எனக்கு... நியாயத்தை பேசக் கூட முடியாத மாதிரி, கைநாட்டுப் பேர்வழின்னு கதைகட்டி விரட்டுருங்க பாரு, அதை நினைக்கும் போதுதான் வயித்தை பத்திக்கிட்டு எரியுது! அடடே. என் விசாரத்துல நீ வந்து இவ்வளவு நேரமாச்சு...கவனிக்குலியே! உபசாரத்துக்கு என்ன வேணும்னு கேட்குல பாரு! நீ என்ன சாப்டிடுறே. காபியா பாலா...இப்படி நேராவே கேட்குறேன்னு தப்பா நினைக்காதே! உனக்கு புடிச்சதை உங்கூடி சேர்ந்து நானும் சாப்புடனும்; அவ்வளவுதான். (சிரிக்கிருள்) பொன்: நீ சிரிக்குறதே போதும்! எனக்கு ஜூஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கு! காமு, முன்னக்கி இப்ப ரொம்ப விக்கா இருக்குறே, ஏதாவது டானிக் வாங்கி சாப்பிட்டா என்ன? ஐஸ் விக்குறவன் டீ வாங்கி குடிக்கிருன், டீ விக்கிறவன் ஐஸ் சாப்பிடுருன், நீயோ பாலே போதும்னு இருக்குற... அப்படித்தானே... நவ...8