பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

நவராத்திரிப் பரிசு

யாராத்துக்கும் போய்க் கூப்பிடமாட்டேன்' என்று மூன்று நாளாக ரகளை. நான் என்ன பண்ண அம்மா?. தங்கமான குழந்தையை அடையக் கொடுத்துவைத்தும் தரித்திரமாய் இருக்கிறேன்" என்று கவலைப்பட்டாள் மகாலட்சுமி.

கௌரி எங்கோ போயிருந்தவள் ஓடிவந்தாள்.வந்தவள் என்னைக் கவனிக்காமல், 'கோபியாத்துக் கூடத்திலே குளம் மாதிரிச் சின்னதா வெட்டறா.'என்னத்துக்கடி?' என்று பங்கஜத்தைக் கேட்டா, 'அதுலே ஜலம் விட்டு மீன் மாதிரி பொம்மை இருக்கு பார், அதைவிட்டா மிதக்கும். சுத்திச் செடிபோட்டால் குளத்தங்கரை மாதிரி இருக்குமடி' என்றாள். நம்மாத்திலே ஒண்ணும் இல்லையாம்மா? என்றாள். அதற்கு மகாலட்சுமி பதில் சொல்லாமல், "உன் பின்னால் யார் வந்திருக்கா பார்" என்றதும் என்னைப் பார்த்துவிட்டு, "நீங்கள் கொலு வைக்கப்போறதில்லையா மாமி?" என்றாள் கௌரி.

"இன்னும் இருக்கிறதே; இப்பொழுதுமுதல் என்ன அவசரம்?" என்றேன்.

"போன வருஷம் உங்காத்துப் பொம்மையிலே அந்த மகிஷாசுரமர்த்தனி ஒண்ணுதான் எனக்குப் பிடிச்சிது. அது இருக்கா மாமி?" என்றாள்.

"இல்லாமல் என்ன? இருக்கிறது."

"இந்த வருஷங்கூடப் போன வருஷம் மாதிரி தினம் ஒரு அலங்காரம் பண்ணுவேளோ?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"செய்கிறது" என்றேன் நான்.

"அந்த மாதிரிப் பொம்மை இந்த ஊரில் யாராத்துலேயும் இல்லை" என்று அவள் தானே சொல்லிக்கொண்டாள்.

நாங்கள் இந்த ஊருக்கு வந்து இரண்டு வருஷத்துக்கு மேல் ஆகிறது. போன நவராத்திரியின்போது ஊருக்கு நான் புதிது. எதிரகத்துக் கௌரியைத்தான் தெரியும். கொலு வைத்தேனே ஒழிய அவள் தான் ஊரழைக்கப் அவள்தான் போவாள். என்னிடம் இருந்த பொம்மையில் மகிஷாசுர