பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நவராத்திரிப் பரிசு


' இன்றைக்கு லீவு போட்டு விட்டேன் ' என்ருன் . “ அம்மாவுக்குச் சிசுருவுை செய்வதற்காகவா ?” என்று கேட்டாள் சுசீலா.


காகராஜன் சிரித்து விட்டான்.


"மார்வலியும் இல்லை; ஒன்றும் இல்லை. என்னவோ வய சாகி விட்டாலே புத்தி தடுமாறி விடுகிறது.”


' ஊஹாம். இது. சுசிலாவின் பதில். " உனக்கு என்மேல் கோபம் தான்ே ?”


சே, சே. தன்னந்தனியாய் மாடியில் படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கி,மவிக்குத் துணை இருக்கப் போல்ை, எனக்குக் கோபம் வருவது கியாயமா ?' என்று சற்றுப் பரிகாசமாகவே கேட்டாள் சுசீலா.


" நீ வந்த திலிருந்து உன்னுடனேயே பேசுகிறேனம். அவளுடன் பேசுவதில்லையாம். இதுதான்் அவள் குறை '


சுசீலாவுக்கு இந்த ஒரு வார்த்தையிலேயே மாமியா ரின் குணம் புரிந்துவிட்டது. ஊரார் மெச்சப் பிள் அளக் குக் கல்யாணம் பண்ணினளே தவிரத் தன்னைக் கண் டால் அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது விளங்கிவிட் -து.


சுசீலா மேலும் பேசுவாள் என்று கினைத்து, சிறிது நேரம் அங்கேயே நாகராஜன் உட்கார்ந்திருந்தான்். ஆனல், அவளுடைய பேச்சுக்கு மாருக அடுப்பில் தள தளவென்கிற சத்தத்துடன் சாதம்தான்் கொதித்துக் கொண்டிருந்தது.


வாலாம்பாளுக்கு அன்று மார்வலி வந்தது உண் மையோ இல்லையோ, அந்தச் சம்பவம் கடந்து ஒரு வாரத் துக் கெல்லாம் திடீரென்று குளிர் காய்ச்சல் வந்துவிட் டது. சுசீலா, மனத்திலிருந்த வெறுப்பை யெல்லாம் அடக் கிக் கொண்டு. கணவன் மனங் கோணுமல் சிக ரூஷைகள் செய்தாள். வேளைக்கு வேளே மருந்து கொடுத்தாள். உடம்பு வலிக்கிறது என்று சொன்னல், உடம்பைப் பிடித்து விட்டர் ள் இவ்வளவு செய்தும் வாலாம்பாள் சிற் சில சமயங்களில் நாட்டுப்பெண்ணை வெளியே அனுப்பிவிட்