பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நவராத்திரிப் பரிசு


திடீர் திடீரென்று படுக்கையில் அலறிப் புடைத்துக் கொண்டு, அதோ பாருங்கள் ! அம்மா குறட்டை விடுகிற மாதிரியே இல்லையா?” என்று கல்ல துாக்கத் தில் இருக்கும் நாகராஜனைத் தட்டி எழுப்புவாள். அதெல்லாம் ஒன்றும் இல்லை, தாங்கு' என்று சொல்லி விட்டு நாகராஜன் மறுபடியும் கித்திரையில் ஆழ்ந்து விடு வான். பொழுது விடிந்ததும் இரவு அவள் பயந்ததைச் சொல்லிப் பரிகாசம் செய்வான்.


போங்கள், உங்களுக்குப் பரிகாசமாக இருக்கிற தாக்கும். ரேழி அறையில் அம்மா கடமாடுகிற மாதிரியே எனக்குத் தோன்றுகிறது. அவர் இந்த வீட்டை விட்டுப் போகவில்லை. என்னிடம் ஏற்பட்ட சந்தேகம் அவருக்குக் குறையவில்லை. உங்கள் அன்பை நான் அட்ைந்துவிட்டேன் என்று பொருமைப்பட்டுக்கொண்டே இருந்தார்' என்ருள் சுசீலா பயம் நிறைந்த கண் களுடன.


அடி, அசடே ' என்றுதான்் நாகராஜனுக்குச் சொல்லத் தோன்றியது.


அன்று அமாவாசைக்கு முந்திய தினம். சுசீலா வமுக் கம்ப்ோல் சமையல் வேலைகளே முடித்துவிட்டுத் தெரு வில் வள்ளியம்மையோடு பேசிக்கொண்டு உட்கார்ந்திருந் தாள். வாலாம்பாள் இறந்துபோய் மூன்று மாதங் களுக்குமேல் ஆகிவிட்டன.


அம்மா! உன்னைப் பார்த்தால் சந்தேகமாக இருக் குதே; தலே முழுகி எவ்வளவு நாள் ஆச்சு ?’ என்று சந்தோஷம் தொனிக்கும் குரலில் கேட்டாள் வள்ளி யம்மை.


போடி மூணு மாசந்தான்் ஆறது. உடம்பு சரி யாக இல்லை. இந்த வீட்டிலேயே இருக்கப் பிடிக்க வில்லை. ஐயரிடம் சொன்னல் காதில் போட்டுக் கொள்ள மாட்டேன் என் கிரு.ர்.”


என் வீட்டுக்கு என்ன அம்மா ?”


அந்த அம்மாளுக்கு என்னைக் கண்டாலே பிடிக்க


வில்லை. கிான் அடி வைத்த நாளிலிருந்து என்னைக் கண்