பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நவராத்திரிப் பரிசு


சுசீலாவின் ஜூரம் படிப்படியாகக் குறைய ஆரம்பிக் தி.து.


இங்கே இருக்கிறவரையில் சந்தோஷமாக இருக் கிறது. அந்த வீட்டுக்குப் போகவேண்டுமே என்று கவலைப்படுகிறேன் ' என்ருள் சுசீலா, ஒரு நாள், கர்ஸி 1-ம.


கர்ஸ் ஒரு விதமாகச் சிரித்துக்கொண்டாள். சுசீலா வின் உடம்பு பூரண குணம் அடைந்ததும், வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்று டாக்டர் கூறி விட்டார். வீட்டுக்குப் போகும் அந்த நாளும் வந்தது. டாக்சி யில் ஏறி உட்கார்ந்த சுசீலாவின் முகம் வாட்டமடைங் தது. நாகராஜன் அதைக் கவனிக்காதவன்போல உட் கார்ந்திருந்தான்். ஆனால், டாக்சியோ அவள் முன் பின் பார்த்திராத ஒரு வீட்டின் முன் கின்றது. வாசலில் வள்ளியம்மையும் கின்றிருந்தாள். வா, அம்மா ' என்று சொல்லித் திருஷ்டி கழித்து, எஜமானியை வர வேற்ருள் வள்ளியம்மை. சுசீலா வெட்கத்துடன் நாக ராஜனைப் பார்த்தாள்.


என்னிடம் சொல்லவே இல்லையே. வேறு வீடு பார்த்துவிட்டீர்களா, என்ன?”


ஆமாம் ' என்ருன் நாகராஜன். அதே சமயத்தில் சுசீலாவின் பார்வையில் திருப்தி கிறைந்திருந்ததையும் அவன் கவனித்தான்்.