பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நவராத்திரிப் பரிசு


விஜயம் வளர்ந்து வந்தாள். திக்கற்ற விதவையான மீனகதி, விஜயம் ஐந்து வயதாக இருக்கும்போது ரகு ராமன் வீட்டில் சமையல் வேலைக்கு அடைக்கலம் புகுங் தாள். ரகுவுக்கு அப்போது வயது பத்து. விஜயம், தன் வீட்டுச் சமையல்காரியின் பெண் என்பதையே அவன் மனம் கினைக்கவில்லை. விஜயம் வளர்ந்து பெரியவளான பிறகு ரகுவின் சகல வேலைகளேயும் அவளே கவனித்து வந்தாள். அவன் அறையைப் பெருக்குவது, புஸ்தகங்களே ஒழுங்காக வைப்பது, துணிகளே மடித்து வைப்பது எல் லாம் விஜயம்தான்். ஆனால், முன்போல் ரகுவுடன் அவள் கலகலப்பாகப் பேசுவதில்லை. அவன் ஏதாவது கேட் டால் தலையைக் குனிந்துகொண்டே பதில் சொல்வாள்.


ரகுவுக்குப் பல இடங்களிலிருந்து ஜாதகங்கள் வர ஆரம்பித்தன. போட்டியாக நான், நீ என்று பெண் கொடுக்க அநேகம் பணக்காரர்கள் வந்தார்கள். ரகுவின் தகப்பனர் பிள்ளைக்குப் பெண் தேடுவதில் முனைக் திருந்தார். இந்தச் சமயத்தில்தான்் ரகு ஒரு நாள் திடீரென்று அவன் தாயாரிடம் , 'கான் விஜயத்தைத் தவிர வேறு யாரையும் மணக்கப் போவதில்லை' என்று கூறினன். தாயார் திகைத்து கின்ருள்.


' என்னடா இது அவளே அைைதயாக விட்டுவிடப் போகிருேமா, என்ன ? அவளுக்கு நல்ல இடமாகப் பார்த்து இக்க வருவும் கல்யாணம் பண்ணிவிட்டால் போகிறது. அதற்கு தோன அகப்பட்டாய் ?’ என்று அவள் கேட்டாள்.


" இதில் என்ன பிசகு இருக்கிறது அம்மா ? விஜயம் என்ன அமுகில்லாதவளா? பணம் ஒன்று மட்டும் இருந்து விட்டால் போதுமா ?” என்று வாதித்தான்் ரகு.


அப்பொழுது கூடத்தில் கண்ணுடிக்கு எதிரில் விஜ யம் தக்லவாரிப் பின்னிக்கொண் டிருந்தாள். பால் போன்ற உடல் கிறத்துக்கு ஏற்றபடி கறுப்புப் புடைவை கட்டியிருத்தாள். கை கிறையப் பச்சைக் கண்ணுடி வளே யல்கள். எடுப்பான மூக்கும், வளேங்த புருவமும், நீண்ட கண்களும் விஜயம் நல்ல அழகி என்று தெரிவித்தன. அவளுக்கு ஸ்திரீதனமாக வரக்கூடிய பொருள் ஒன்றும்