பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நவராத்திரிப் பரிசு


இறந்து விட்டாள். பரம்பரையாக இருந்த அந்த முத்து மாலையை அவள் ஒன்றும் செய்யக் கூடாது என்று விஜ யத்திடம் அவள் தாயார் கூறியிருந்தாள். ரகு ஒரு கம் பெனியில் குமாஸ்தா வேலையில் அமர்ந்தான். மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். ஆரம்பத்தில் இல்வாழ்க்கை இன்பமாகத்தான்் இருந்தது. கல்யாணமான ஆறு மாதங் களுக்குப் பிறகு ஒரு நாள் இரவு சாப்பாடு முடிந்ததும் விஜயம் தன் புருஷன் அருகில் வந்து உட்கார்ந்துகொண் டாள். வசந்த காலம்; தெருவில் மூலே முடுக்குகளி லிருந்து நாதஸ்வரத்தின் இனிமையான காதம் காற்றில் வழ்ந்து வந்தது. தாம்பூலம் தரித்த சிவக்க உதடுகளே க் காணலாக மடித்து, ' என்ன ? யோசஃன பலமாக இருக் கிறதே ' என்று கேட்டாள் விஜயம்.


யோசனைதான்், விஜயம் ! நீ மூன்று மாதக் கர்ப் பிணி. உனக்குத் தாயாரும் இல்லை. என் தாயார் அனுப் பிய நூறு ரூபாய்ையும் அப்பாவின்மேலுள்ள கோபத்தால் திருப்பி அனுப்பிவிட்டேன். உனக்கு எவ்வளவோ செய்ய வ்ேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஒன்றும் செய் யாவிட்டாலும் கழுத்தில் போட்டிருக்கிருயே முத்து மா அல, அதையாவது தங்கத்தில் கட்டிப் போட்டுப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது!”


  • அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கிறது. அதற்காக யோசஆன செய்து ஏன் மனத்தைக் கெடுத்துக்கொள்கி lர்கள் ?”


" மனத்தைக் கெடுத்துக் கொள்ளவில்லையே? ஆசை தான்ே படுகிறேன் !”


விஜயம் சிரித்துக் கொண்டே கணவன் முகத்தைப் பார்த்தாள்.


விஜயம் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாள்ை. யுத்தக் கொடுமையால் சாதாரண வருவாயிலுள்ள குடும் பத்தினர் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். அம்மாதிரிக்


குடும்பங்களில் ரகுராமனின் குடும்பமும் ஒன்று.