பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நவராத்திரிப் பரிசு

3

மர்த்தனி ஒன்றுதான் பெரியது. சுமார் மூன்று அடி உயரம் இருக்கும்; சர்வலக்ஷணமும் பொருந்தியிருக்கும்.

தினம் ஓர் அலங்காரம் செய்யும்போது கௌரி என் பக்கத்திலேயே இருப்பாள்.

"மாமி, இந்தப் பொம்மை எங்கே வாங்கினேள்?"

"நான் வாங்கவில்லை அம்மா. என் தாயார் இறந்து போவதற்குமுன் வாங்கிக் கொடுத்தாள். அவள் ஞாபகப் பொருள் இது" என்றேன்.

"இந்த மாதிரிப் பொம்மை கிடைக்காதா மாமி?"

"என் கண்ணில் அகப்படவில்லை. இது வாங்கி எட்டு வருஷம் ஆகிவிட்டது" என்றேன்.

கௌரி நாள் தவறாமல் அந்தப் பொம்மையை ஒரு மணி நேரமாவது நின்று பார்க்காமல் இருக்கமாட்டாள். மஹிஷாசுரமர்த்தனி அவள் மனத்தைக் கவர்ந்துவிட்டாளோ என்னவோ?

  • * *

நவராத்திரிக்கு முதல் நாள்.

பொம்மைப் பெட்டியைக் கிளறிக்கொண்டிருந்தேன். கௌரி என்னோடு அலைந்துகொண்டிருந்தாள். அவளகத்துப் பொம்மைகளிடம் மதிப்பு இல்லை அவளுக்கு.

"மாமி, மாமி, இந்த நாயைப் பார்த்தேளோ? உங்காத்துக் 'குண்டு' மாதிரியே இருக்கே. ஐயையோ! அந்தச் சிப்பாயைப் பாருங்களேன்" என்று குதித்துக் கொண்டிருந்தாள். நான் மஹிஷாசுர மஹிஷாசுர மர்த்தனியை வெளியில் எடுத்ததுதான் தாமதம். கையிலிருந்த அத்தனை பொம்மைகளையும் வைத்துவிட்டு என்னிடம் ஓடிவந்துவிட்டாள்.

"நாளைக்கு என்ன மாதிரி அலங்காரம் பண்ணப் போறேள்?" என்று கேட்டாள்.

"நீதான் சொல்லேன்."

"அந்த வெள்ளைப் புடைவையைக் கட்டி ஸரஸ்வதி அலங்காரம் பண்ணலாமே."