பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நவராத்திரிப் பரிசு


என்ன மாமி: ஸ்நானம் ஆகிவிட்டதா?’ என்று கேட்டேன். " ஆகிவிட்டது அம்மா; இன்று என்ன இவ் வளவு சீக்கிரம் எழுந்துவிட்டாய்” என்ருள்.


" துளக்கம் பிடிக்கவில்லை. அதோடு உங்கள் பாட்டு கன்ருக இருந்தது; இன்னும் கொஞ்சம் பாடுவீர்கள்,


கேட்கலாம் என்று வந்தேன் ' என்றேன்.


பாகீரதி ஒரு மாதிரியாகச் சிரித்துக்கொண்டாள்.


ஐயோடி 1 என் பாட்டும் நானும் ' என்று வெறுப் புடன் சொல்லிவிட்டு, " போகிறேன்! பூஜை செய்து விட்டு அடுப்பு மூட்டினல் சரியாக இருககும் ' என்று சொல்லிக்கொண்டே போய்விட்டாள்.


வக் கில் நாகநாதையருக்கு மனவி இல்லை. ஒரு பெண்ணையும், பிள்ளையையும் வைத்துவிட்டு அவள் இறந்துவிட்டாள். அப்போது அவருக்கு வயது நாற்ப துக்குள் இருக்கும். பாகீரதி அவருக்கு மைத் துனி ஆக வேண்டும். தங்கை இறந்து போனபோது வந்தவளைக் குழந்தைகளைக் கவனிப்பதற்காகத் தம் வீட்டிலேயே வம் புறுத்தி வைத்துக்கொண்டார் அவர்.


பாரேதியை விடியற்காலம் ஜந்து மணிக்குள் கிணற் றடி யில் பார்த்தால் உண்டு. இல்லையென்றால் சமையல் அறைக்குள் தான்் பார்க்கமுடியும். ஒருவர் எதிரிலும் அவள் வருவதில்லை. வீட்டில் மற்ற வேலைகளே ச் செய்வது, வருகிற வர்களே விசாரிப்பது முதலியவற்றை வக்கீலுடைய பெண் லகன்டிமிதான்் கவனித்துவந்தாள். பாரே தியின் குரல்கூட அதிகமாகக் கேட்காது. உதயத்திலிருந்து அஸ்தமனம்வரையில் சலியாத உழைப்பு. கண்னன் ைேதயில் சொல்லியிருக்கும் கடமையை நன்கு உணர்ந்த வள் பாகீரதி என்று சொல்லலாம். தங்கை குழந்தைகள் பெரியம்மாள் வார்த்தைக்கு மறுத்துப் பேசமாட்டார்கள்.


பாரே தி உள்ளே போனபிறகுகூட அவள் குரல் இனிமை என் காதிலே ஒலித்துக்கொண் டிருந்தது. அவர் கள் குடிவந்த கர்ளாய்ப் பாகீரதியைப்பற்றி விசாரிக்க வேண்டுமென் கிற ஆவல் ஏற்பட்டதில்லை. அன்று கால அவள் பாட்டைக் கேட்டபிறகு ஏதோ ஒருவித