பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நவராத்திரிப் பரிசு


' என்ன அம்மா யோசிக்கிருய்?' என்ருள் பாரே தி.


' ஒன்றும் இல்லை மாமி! என்னைப்பற்றித் தவருக கினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று என் மனம் துடிக்கிறது. நான் இன்னெருவர் விஷயத்தில் அதிகமாகத் தலையிட மாட்டேன்' என்று தயங்கிக் கொண்டே சொன்னேன்.


' என் கதையைக் கேட்பதால் புண்ணியமா ஏற்படப் போகிறது? அதைக் கேட்டால் கதை எழுதுகிறவர்கள் ஒரு நல்ல கதை எழுதி விடலாம், நாளேக்கு விடியற் காலம் கபில தீர்த்தத்துக்கு ஸ்நானம் செய்யப் போகி றேன். கூட வந்தாயானல் என் புண்ணிய கதையைச் சொல்கிறேன் !" என்ருள்.


' ஆகட்டும்' என்று ஒப்புக்கொண்டேன்.


விடியற்காலம் மணி ஐந்துக்குக் குறைவாக இருக்க லாம். பனிக்காற்று, சிலுசிலு வென்று அடித்துக் கொண் டிருந்தது. ஆகாயத்தில் நகூடித்திரங்கள் சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண் டிருந்தன. நாகநாதையருடைய பிள்ளை பாலு எங்களுக்கு முன்பு போய்க்கொண் டிருங் தான்். ஊருக்கு வெளியே போகும்வரையில் பாகீரதி தன் வழக்கப்படி மெதுவாகப் பாடிக்கொண்டே வங் தாள். அங்தக் குளிர்ந்த வேளையில், கார்மேனிச் செங்கண், கதிர் மதியம் போல்முகத்தான்்’ என்று அவள் பாடிய போது வானத்தில் சிற்சில இடங்களில் கன்னங் கரேலென்று பரவி இருந்த மேகக் கூட்டமும், கீழ்த்திசையில் ரவியின் வருகையை அறிவிக்கப் பரவியிருந்த ஒளியும் கண்ண அனுடைய உருவத்தையே கினே வூட்டின.


இந்தக் குளிரில் எப்படித்தான்் ஸ்நானம் செய்யப் போகிறேனே?' என்று பேச்சை ஆரம்பித்தேன்.


' எல்லாம் இரண்டு நாளேக்குச் செய்தால் வழக்க மாகி விடுகிறது. பாலுவின் அம்மா இருந்தாளே, அவள் என்னைப் பாாத்து இப்படித்தான்் கேட்பாள் : என்ன அக்கா, இரவு பதிைேரு மணிவரையில் உழைத்துவிட் டுத் திரும்பவும் விடியற்காலம் நாலு மணிக்கே எழுந்து விடுகிருயே என்பாள். என் கதையைக் கேட்கவேண்டும் என் கிருயே என்று பாகீரதி ஆரம்பித்தாள்.