பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகீரதி 111


அதுவரையில் சொல்லிவிட்டுப் பாகீரதி பெருமூச்சு விட்டாள். நான் கதையைச் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டு வந்தவள், திடுக்கிட்டு அவள் முகத்தைக் கவ னித்தேன். காலே ஒளியில் அவள் முகம் வெளுத்திருந்தது. கண்கள் ஏதோ வெறி பிடித்தவைபோல் மிரண்டு பார்த் துக்கொண்டிருந்தன. பிறகு சிறிது கேரம் கழித்து மறு படியும் பாகீரதி ஆரம்பித்தாள்.


சுந்துவின் அதிர்ஷ்டம் ஆரம்பமானவுடன், என் வாழ்க்கை இருளடைய ஆரம்பித்தது. என் கண வருக்கு நாளுக்கு நாள் உடம்பு அதிகமாகவே, நாங்கள் எல்லோ ரும் கவலேப்பட ஆரம்பித்தோம். என் மனத்தை அறுத்து விந்த துக்கத்தை யாரிடமாவது சொல்லி, அழவேண்டும் போல் தோன்றியது.


"வீட்டி ல் வைத்தியரை அடிக்கடி அமுைத்துவர யாரா வது வேண்டியிருக்கிறது என்று சொல்லி நாகநாதனே வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருந்தோம். நான் மறை வாகப்போய்க் கண்ணிர் வடிக்கும்போதெல்லாம். அவன் வதாவது தேறுதல் வார்த்தைகள் சொல்லுவான். என் வாழ்க்கை எப்படி ஆகுமோ என்று இதுவரையில் எல் லோர் மனத் தி லும் ப்ேர்ராட்டத்தை உண்டு பண்ணி வந்த புதிர் விடுபட்டது. திடீரென்று என் கணவர் இறந்து விட்டார். நாகநாதன் என்னே ஒரு நாள் சந்தித்தபோது, நான் முதல்முதல் பார்த்த பால்வடியும் முகம் பாமு டைந்து ப்ோய் வீட்டதே ' என்று அழுதேவிட்டான்.


4 o' "ஐயோ ! இதென்ன இப்படி அழுகிறீர்களே ք என்று நானும் நடுங்கிப்போனேன்.


'உன் காலத்தை எப்படிக் கழிப்பாய்?' என்ருன்.


நான் தேம்பித் தேம்பி அழுதேன். அசடன் சுக் துவை நான் கல்யாணம் செய்துகொண் டிராவிடில்’ என்று அவன் சிறிது தடுக்கத்துடன் கூறிச் சட்டென்று நிறுத் திக் கொண்டான். என் தேகம் பூராவும் கடுங்கியது.


உங்கள் மனத்தை நான் அவ்வளவு கெடுத்துவிட் டேன ?' என்றேன்.