பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நவராத்திரிப் பரிசு


" சி, கெடுக்கிறதாவது.'


சுந்துவின் கள்ளங் கபடற்ற முகம் என்னைக் கேலி செய்வதுபோல் தோன்றியது.


இனி மேல் சத்தியமாக உங்கள் எதிரில் வரமாட் டேன்’ என்றேன்.


' என்ன என்ன?’ என்று அவன் பதற்றத்துடன் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே, அந்த இடத்தை விட்டு வந்துவிட்டேன். அதிலிருந்து அவன் எதிரில் இன் னும் நான் போகவில்லை. சுந்து இருந்தவரையில் இந்த வீட்டில் காலடி வைத்ததில்லை. அவள் இறப்பதற்கு முன்பு, அக்கா உன்னே த் தவிர என் குழந்தைகளுக்கு வேறு கதி இல்லை என்று அழுதுவிட்டுப் போள்ை. லக்ஷ்மி புக்ககம் போய் விட்டால், நான் ஊருக்குப் போய்ப் பகவத் பஜனே யில் காலத்தைக் கடத்துவேன் அம்மா !' என்று பாகீரதி சொல்லி முடித்தாள்.


கபில தீர்த்தம், அதன் சுற்றுப்புறம் எல்லாம் பாகி ரதியின் கதையைக் கவனித்துக் கேட்பதுபோல் அமைதி யாக இருந்தன. மாயனே மன்னு வடமதுரை மைந்தனே என்று பாகீரதி குளத்தில் ஸ்கானம் செய்ய ஆரம்பித் தாள.


நானும் குளிருக்குப் பயந்து கடுங்கிக் கொண்டே மெதுவாகத் தண்ணிரில் காலே வைத்தேன்.