பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நவராத்திரிப் பரிசு


வந்தவர் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ' மழைக்குத் தங்க வந்தாயா? இல்லே, வீட்டில் இருக்கிற ஒட்டைச் செம்பைச் சுருட்டிக்கொண்டு போக வங் தாயா?” என்று கேட்டார்.


அவன் பதில் சொல்வதற்குள், " ஸ்வாமி! நீவாஞ் சிய தரிசனம் எங்களை நடுத்தெருவில் கிற்க வைத்து விட்டது. மழையைப் பார்த்தால் ஊர் போய்ச் சேரமுடி யும் என்று தோன்றவில்லை. இராப் பொழுதை இங்கே கழிப்பதற்கு உதவி செய்யவேண்டும்” என்றார் மாமா, அவர் இவ்வளவு விநயமாகப் பேசியது இதுதான்் முதல் தடவை. கிழவர் பேசாமல் எங்களை உள்ளே அழைத்துக் கொண்டு போனர். கூடத்தில் எரிந்துகொண் டி ருந்த கரி யேறிய விளக்கைத் தாண்டிவிட்டு, ' மழையாவது மமுை! என் ஆயுளில் இதுதான்் இரண்டாவது தடவை இப்படி மழை கொட்டுகிறது. என்ன, தெரிந்ததா? எனக்கு இரு பத்தைந்து வயதிலே இந்த மாதிரி ஒரு தரம் மழை பெய் தது. பாவம், சிறிசோடு தனியர்க அகப்பட்டுக்கொண் டீர்களே?” என்று அதுதாபப்பட்டார்.


வானம் டமடமவென்று இடித்தது. நான் காது இரண்டையும் பொத்திக்கொண்டேன். இடியென்றால் எனக்கு மகா பயம். என்னேப் பார்த் துக் கிழவர் தம் பொக்கை வாயைத் திறந்து சிரித்து விட்டு, சிறிசு, பயப்படுகிறது. ஏனம்மா, பயமா யிருக்கா?’ என்று விசாரித்தார்.


இடியென்றால் யாருக்குத்தான்் பயமாயிருக்காது?’ என்றேன். நான்.


" உனக்குப் பயம் தோனமல் இருக்க ஒரு கதை சொல்லட்டுமா?’ என்றார் கிழவர்.


இது மாமாவுக்குப் பிடிக்கவில்லே. * நீ என்ன ராத்திரி பூராவும் கதை கேட்டுக்கொண் டிருக்கப் போறயா?” என்று கேட்டார்.


ஆமாம், உங்களுக்குத் தாக்கம் வந்தால் தாங்குங் கள். இந்த இடியிலும் மின்னலிலும் கான் தாங்கவே