பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நவராத்திரிப் பரிசு


புகுந்து கடத்திக் கொள்ளட்டுமே. என்ன நான் சொல் வது?' என்றார் கிழவர்.


  • வாஸ்தவம்’ என்றேன். நான். கிழவர் மேலும் ஆரம்பித்தார்: ' கிராமத்தில் குடிவளம் இல்லை. முப்பது வருஷத் துக்கு முன்னே குடியானத் தெருவில் தன் முறைப் பெண்ணை வேறொருத் த்ன் கல்யாணம் செய்துகொண் டான் என்று ஒரு கலகம் ஆரம்பித்தது. கோர்ட்டு வரைக் கும் போய், எல்லாரும் ஆஸ்தியைத் தோற்றுவிட்டுத் தலையில் துணியைப் போட்டுக்கொண்டு பட்டணம் பக்கம் போய்விட்ட்ான்கள். குடிவளம் இல்லாத ஊரில் கிலத்தை யார் வாங்குகிருர்கள் பாதிக்குமேல் கரம்பாய்க் கிடக்கிறது. எனக்குக் கோவில் மான்யம் முக்கால் காணி கிலம். தோட்டக்காரன் ஒருத்தன் ப்ழைய விசுவாசத்தை வைத்துக்கொண்டு பயிரிடுகிருன். அவன் பார்த்துக் கொடுத்தது. ஊரில் பதினேந்து வீடு களுக்குமேல் உருப்படியாய் இல்லே ' என்றார் கிழவர்.


உங்களுக்குப் பந்துக்கள் யாரும் இல்லேயா ?” என் றேன்.


  • முதலிலேயேதான்் சொன்னேனே ஈசுவரனும் அம்பிகையும் தவிர வேறு யாரும் இல்லை. தங்கை பிள்ளே திருச்சிப் பள்ளியில் வேலையா யிருக்கிருன் என்னவோ அப்பா, என் கட்டை கீழே விழுந்தால் ஆனதைச் செய்து விடு' என்று கூறியிருக்கிறேன். என் சம்சாரம் போய் இருபது வருஷம் ஆகிறது. அவள் வீட்டை மெழுகித் கோலம் போட்டால் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழழையும் கோவிலுக்குத் கோலம் போடுவாள். ஊர் ஜனங்கள் அத்தனை பேரும் மெச்சுவ தைக் கேட்டு எனக்கே பெருமை தாங்காது. பிரதி வெள் விக்கிழமையும் ஒரு ரூபாய் போல் சில்லறையும் தேங்காய் பழம் முதலியவ்ைகளும் கிடைக்கும். அந்த சசுவரனுக்குத் தர்ன் என்ன மனசோ தெரியவில்லை_அந்த-மகாலசுமி போய்விட்டாள். யாரைச் சொல்லுகிறேன் தெரிந்த தா ? என் சம்சாரத்தைத்தான்். அப்புறம் ஊருக்கே பிடித்தது சனியன்” என்றார்.