பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重 ア


o T T- = f அவா வநதாா :


அடுக்தடுக்கான மலைத் தொடருக்குப் பக்கத்தில் வேப்பங் காட்டில் மூன்று நான்கு பிரம் மாண்ட மான கட்டிடங்களில், உலகத்துச் சுகங்களே அநுபவிக்க நமக்கு உரிமை உண்டா என்று எங்கும் உள்ளங்களு டன் தவங்கிடந்தனர் அநேக கூடிய யோகிகள். கூப்பிடு துாரத்தில் தடதடவென்று ஒடும் ரெயிலின் ஒசையைத் தவிர லோஷன் காற்றம், டாக்டர்களின் கடமாட் டம் இவைகளைத்தாம் அறிந்திருந்தார்கள் அவர்கள்.


பூத்துக் குலுங்கும் ஒரு வேப்ப மர கிமுலில் செல்லம் கண்ணே மூடிக்கொண்டு படுத்திருந்தாள். காலே நேரம்: மணி ஆறு இருக்கும். குளுகுளுவென்று காற்று இனிமை யாக வீசிக்கொண் டிருந்தது. வேப்பமரத்துக்கு அடுத்த குண்டு மல்லிகைச் செடி ஒன்றில் ஏழெட்டு மலர்கள் பூத் திருந்தன. செல்லம் கண்ணேத் திறந்து பார்த்தாள். அவை களைப் போல் தான்ும் ஒரு காலத்தில் யெளவனத்தோடும் அழகோடும் சோபித்தது அவள் மனத்தில் கனவைப் போல் தோன்றியது.


டக் டக்கென்று பூட்ஸின் சத்தம் கேட்டது. டாக் டர் ஸ்ரளா அவள் பக்கத்தில் வந்து கின்ருள். மல்லிகை யையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண் டிருக்த செல்லத்தின் கடைவிழிகளில் நீர் முத்துப்போல் தேங்கி வழிய ஆரம்பித்திருந்தது.


“ அம்மா, செல்லம்!” என்று கூப்பிட்டாள் ஸ்ரளா. பரிவுடன் தன்னை அழைக்கும் குரலுக்குப் பதில் கொடுப் பவள் போல் செல்லம் நன்ருகக் கண்களேத் திறந்தாள்.


அழகே உருவாய், பரிபூரண ஆரோக்கியத்துடன் தன் இனக் காப்பாற்ற கிற்கும் ஸரளாவைப் பார்த்துச்