பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நவராத்திரிப் பரிசு


சிரிக்க முயன்ருள் செல்லம். ஆனல் சிரிப்பு ஏனே வர வில்லை.


' உடம்பு எப்படி இருக்கிறது, செல்லம் ? ஏன் இப் படி அயர்ந்துபடுத்துக்கொண்டிருக்கிருய்?' என்று கேட் டுக்கொண்டே ஸ்ரளா அருகிலிருந்த காற்காலி ஒன்றில் உட்கார்ந்துகொண்டாள்.


உடம்பு எப்படி இருக்கிறது என்று சொல்ல சீ இந்த நோய் என்னை அரிக்கிற மாதிரி நாட்களேயும் கால சக்க்ரம் அரித்துக்கொண்டே போகிறது என்று மனத் துக்குள் நினைத்துக்கொண்டாள்.


மருந்து சாப்பிட்டாயா அம்மா ? வாய்க்கு ஆகா ரம் பிடிக்கிறதா ?' என்று விசாரித்தாள் ஸ்ரளா.


சாப்பிட்டேன் டாக்டர் ! ஒரு குணமும் இல்லே ' என்று சொல்லிவிட்டு, ' அவரிடமிருந்து ஏதாவது கடிதம் வந்ததா ?’ என்று விசாரித்தாள் செல்லம்.


அவர் ' என்றதும், ஸ்ரளா தன் பர்ஸிலிருந்து ஒரு கடிதத்தை வெளியே எடுத்தாள். செல்லத்தின் முகம் ஆவ்ல்ால் நிறைந்திருந்தது. ஆங்கிலத்தில் எழுதியிருந்த அந்தக் கடிதத்தை ஸ்ரளா தனக்குள்ளாகவே இரண்டு தடவை படித்துவிட்டு, ' உடம்பைப்பற்றித்தான்் விசா வித்திருக்கிரு.ர். சிக்கிரம் குணமாகி அவருக்குச் சந்தேர வத்தைத் தர வேண்டாமா ?” என்று கேட்டாள் GYU U GT ПГ.


ஆமாம், நான் குணமடைந்து திரும்பி வரவேண் டும் என்று அவருக்கு ரொம்ப அக்கறையோ ? இக்த மாதத்துக்குச் சேர் வேண்டிய பணத்தையே இன்னும் அனுப்பவில்லையே. நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள், டாக்டர் ! எங்கே, கடிதத்தைக் காண்பியுங்கள், பார்க்க லாம்!” என்று பதற்றத்துடன் கட்டிலே விட்டு எழுந்தாள் செல்லம்.


செல்லம், படுத்துக்கொள் அம்மா!' என்று சொல்லி விட்டுச் சட்டென்று ஸ்ரளா மற்ற நோயாளிகளே ப் பார்க்கச் சென்ருள்.