பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நவராத்திரிப் பரிசு


ஆகுமா, ஆகாதா ?” என்று இரண்டில் ஒன்றையே அவன் அறிய விரும்பின்ை. செல்லத்தை ஸ்ரளாவிடம் அடைக்கலமாக விட்டுவிட்டு அவன் போய்விட்டான்.


செல்லத்தை முதல் முதல் பார்த்ததிலிருந்தே ஸ்ர ளாவுக்கு அவளிடத்தில் ஒருவிதப் பாசம் ஏற்பட்டுவிட் டது. அந்தப் பேதையின் கதையை அறிந்துகொள்ள அவள ஆசைபபட டாள.


அதற்காக ஸ்ரளா செல்லத்தைத் தேடிப் போன போது அவள், ! டாக்டர் ! அவரிடமிருந்து கடிதம் வங் ததா?” என்று கேட்டாள்.


வந்தது அம்மா, நீ அதையெல்லாம் நினைத்துக் கவலைப்பட்க் கூடாது. நான் ஒன்று கேட்கிறேன் : இந்த வியாதி ஆரம்பித்து எத்தனே மாதங்கள் ஆயின '


" வியாதியா? முதல் பிரசவத்திலிருந்து இருக்கிறது. உடம்பு அப்பொழுதே துரும்பாய் இளேத்துவிட்டது. அவர் கவனிக்கவில்லை. அவருக்கு என்னைப் பிடிக்க வில்லையாம். நான் பாஷய்ை, படித்தவளாய் இல்லை யாம்.'


is of apר"Lמ * †


எனக்கு விவரம் தெரியாத வயசில் கல்யாணம் ஆயிற்று. பணத்துக்காக அவர் என்னைக் கல்யாணம் செய்துகொண்டார். பிறகு அவருக்கு என்னேக் கண் டால் வெறுப்பு ஏற்பட்டது. மாமியாரிடம் நான் பட்ட தொந்தரவுகளைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் எல் லாவற்றையும் நான் பொறுத்துக்கொண் டிருந்தேன். பிறகு ஒரு பிள்ளைக்குத் தாயானேன். அது பிரசவத் தின்போதே இறந்துவிட்டது. அதுமுதல் என் உடம்பு கேவலமாகிவிட்டது. அம்மா வந்தாள், என்னை அழைத் துப் போக. அம்மாவுடன் ஊருக்குப் போனேன்.


  • பிறகு பிறந்தகத்திலிருந்து என்னே அழைத்துக் கொள்ளவில்லை. கஷ்டம் விடியாமல் வளர்ந்துகொண்டே வந்தது. ஆனல் புருஷன் என்ற பாத்தியதையுடன் அவர் வீட்டை அடைந்தேன். அங்கே அநுபவித்த அளவுக்கு மீறிய கஷ்டங்களால் வியாதியும் தாகை வளர்ந்து வங்


என்ருள் ஸ்ரளா.