பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 S ஒடக்காரி


திருதியில் மேலச் சிங்தாமணியில் ஒரு சுப்பிரமணிய ஸ்வாமியின் கோவில். அது அந்தப் பக்கத்துக்கே மிகுந்த சோபையைக் கொடுத்து வந்தது. கோவில் சிறியது தான்். ஆனல் அதில் இருந்த மூர்த்தி மட்டும் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொன்னர்கள். கோவிலைச் சுற்றி அழகிய தோட்டம். அதில் ரோஜா, மல்லிகை மொக்கு கள் மலர்ந்து கண்ணேச் சிமிட்டி மின் னின. அமைதி யாகப் பவனி வந்த காவேரி ஆறும், கம்பீரக் கோவி லும் பார்க்கத் தெவிட்டாத காட்சியாக அமைந்தன.


காலையில் ஸ்திரீகள் காவேரி நதியில் ஸ்நானம் செய்துவிட்டுக் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்து விட்டுப் போவார்கள். உஷக் காலத்தில் மலைக் கோட் டையிலிருந்து இன்ப மூட்டும் காகஸ்வர கீதம் மெல்லிய காற்றில் தவழ்ந்து வரும்.


ஆனால், அதைவிட மேலான தெய்விகமான செவி யின்பத்தை அங்கே அநுபவித்து வந்தேன். உஷக் காலத்திலும், அக்தி வேளே யிலும் ஆற்றங்கரையில் உட்கார்ந்து கவனித்தால், ஒரு பெண்குரல் பாடுவது கேட்டு வந்தது.


  • பல்லினைக் காட்டி வெண்முத்தைப்


பழித்திடும் வள்ளியை - ஒரு பார்ப்பனக் கோலந் தரித்துக்


காந் தொட்ட வேலவா!'


அந்தக் குரல் இசைத்த மதுர கானம் இதுதான்்.


சில காலம் வரையில் அந்தக் குரல் யாருடையது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள் காவிரிக் கரையில் இருந்த பெரிய பூவரச மர கிமுலில் உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். மாலை நேரம். தொலைவில்