பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:30 நவராத்திரிப் பரிசு


'நான்கு வருஷங்களுக்கு முன் கடைசியாக ஷண் முகம் இந்தப் பாட்டைப் பாடிவிட்டுப் போ னர். திரும்ப வும் வரவே இல்லை. தவறு என்னவோ எங்கள் பேரில் தான்். இந்தப் பாட்டு என் குழங்தைப் பருவத்திலேயே மனத் தில் பதிந்து போயிற்று. சிறு வயதில் இந்த மரத்தடியில் நானும் அவரும் இந்தப் பாட்டைப் பல தடவை பாடி யிருக்கிருேம். நானும் அவரும் எப்பொழுதும் சேர்ந்தே விகளயாடுவோம். இதல்ை என் பேரில் அப்பாவு குக் கோபங்கூட வருவது உண்டு. அந்தப் பயலுடன் ஊர் சுற்றுகிருயா ? என்று அடிப்பார். அது ஷண்முகத்துக் குத் தெரிந்துவிட்டால், இந்த அரச மரத்தடி யிலிருந்து இரண்டு தடவை விளில் அடிப்பார்; கான் ஒடிப் போய் விடுவேன்.


'படிப்பு என்னவோ அவர் அதிகம் படிக்கவில்லை என்றுதான்் சொன்னர்கள். இருந்தாலும், ஏதாவது பாடிக்கொண்டே இருப்பார். தனியாகப் பாடும்போது அவருக்கு உத்ஸாகம் அதிகம் இருப்பதில்லே. கானும் கூடச் சேர்ந்து பாட ஆரம்பித்தால் உத்ஸாகம் கரை புரண்டுவிடும். படகைத் தள்ளிக்கொண்டே பாட்டைப் பாடிக்கொண்டு இந்த மாதிரி இரவுகளில் எத்தனையோ தடவை போயிருக்கிருேம். அதெல்லாம் இப்பொழுது கதையாகப் போய்விட்டது.


'அம்மா, ஷண்முகத்தைக் கண்டால் என் அப்பாவுக் குப் பிடிக்காது என்பதில்லை. ஒரு சிறிய தவறு அவர் மனத் தைக் கல்லாக்கிவிட்டது.


"பூரீரங்கத்தில் அன்று என்னவோ உத்ஸவம். நல்ல நிலவு. ஆற்றில் ஏராளமான கூட்டம். அப்பாவுக்கு என்னே அனுப்ப இஷ்டமில்லை. முதல் காளே அவருக்குத் தெரியாமல் போவது என்று நானும் ஷண்முகமும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆற்றில் ஜலம் கொண்டுவரப் போவ தாகச் சொல்லிப் படகில் இருவரும் கிளம்பிவிட்டோம். வடிண்முகங்தான்் படகைத் தள்ளிக்கொண்டு வந்தார். என் மனம் நிலவு பொழியும் நதியைக் கண்டு களிவெறி கொண்டது.