பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நவராத்திரிப் பரிசு

'"கெளரி! பொய் சொல்ல எத்தனை நாளாகப் பழக்கம் ?" என்றேன் நான்.

கௌரி பேசாமல் கண்ணில் நீர் துளும்பப் போய் விட்டாள்.

---

அன்று ஸரஸ்வதி பூஜை. கௌரிக்குத் தெரியாமல் பொம்மைகளைக் கொண்டு போய் அவள் அம்மாவிடம் கொடுத்தேன். இரண்டு நாட்களாய் அவள் என் வீட்டுப் பக்கமே வரவில்லை. காரணம் தெரிந்ததுதானே! கௌரியின் கோபம் தணியவேண்டுமானால் மகிஷாசுரமர்த்தனி அவள் வீட்டுக்குப் போகவேண்டும்!

"கௌரி, இன்று ஸரஸ்வதி வேஷம் போட்டிருக்கேன்; நீ வரமாட்டயா?" என்று கூப்பிட்டேன்.

"நான் வரலை மாமி” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

நான் மனத்திற்குள் சிரித்துக்கொண்டேன்.

"இந்தக் குழந்தைகள், தாங்கள் கோரும் வஸ்து கிடைக்காவிட்டால் என்ன ரகளை பண்ணுகிறதுகள்! அடே அப்பா ! கௌரியின் கோபந்தான் என்ன? பிரமாதமாக இருக்கிறதே" என்றேன், மகாலட்சுமியைப் பார்த்து.

"அவள் கிடக்கிறாள். வராமல் போகிறாளா என்ன?" என்றாள் மகாலட்சுமி.

விளக்கு ஏற்றினதும் கௌரி தன் ஆவலை அடக்க முடியாததனாலோ என்னவோ ஓடி வந்து தூரத்தில் நின்று பொம்மையைப் பார்த்துவிட்டு ஓடிப் போய்விட்டாள்.

"கௌரி, கௌரி!" என்று இரண்டு தரம் கூப்பிட்டேன். அவள் வாசற்படி இறங்கியதும் என்னைத் திரும்பிப் பார்த்த பார்வை என் மனத்தைக் கலக்கிவிட்டது.

"சீ என்ன காரியம் செய்துவிட்டோம்? அப்படி என்ன பிரமாதம் இது? பொம்மையைக் கொடுத்துவிட்