பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவராத்திரிப் பரிசு 7

டால்தான் என்ன?" ...ஆனால் அம்மாவின் ஞாபகம் மறைந்துவிடுமே" என்று ஒரு வழியும் தோன்றாமல் திகைத்தேன்.

நவராத்திரி கழித்து மூன்று நாள் வரையில் கௌரி எங்கள் வீட்டுப்பக்கமே வரவில்லை. வீட்டில் அனைவரும், "கௌரி ஊரில் இல்லையா என்ன?” என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

"போய்ப் பார்த்துவிட்டு வருவோம்" என்று கௌரியின் வீட்டுக்குப் போனேன். கூடத்தில் படுத்துக்கொண்டிருந்தாள்.

“கௌரிக்கு என்ன உடம்பு?” என்று கேட்டேன். "ஜுரம்" என்றாள் மகாலட்சுமி.

கௌரி கண்ணைத் திறந்து பார்த்துவிட்டுக் கண்ணை முடிக்கொண்டாள்.

"கௌரி ! உடம்புக்கு என்னம்மா?” என்றேன். “ஜுரம் மாமி" என்றாள் கௌரி.

“ஸரஸ்வதி பூஜையன்று ராத்திரிப் படுத்தவள்தான்" என்றாள் மகாலட்சுமி.

என் மனத்தை என்னவோ செய்தது.

"ஒருவேளை அந்தப் பொம்மை அவளை இப்படிச் செய்துவிட்டதோ?" அன்று அவள் என்னைப் பார்த்த பார்வை மறுபடியும் என் கண் எதிரில் தோன்றி மறைந்தது. அங்கிருந்து வீட்டுக்குப் போனதும் பொம்மையைப் பெட்டியிலிருந்து எடுத்து வெளியில் வைத்தபிறகுதான் என் மனம் நிம்மதியடைந்தது.

மறுநாள் காலை கௌரியிடம் பொம்மையைக் கொடுத்தேன். அவள் ஆவலோடு, "ஏது மாமி, எனக்காக வாங்கினேளா?" என்றாள்.

"இல்லை; என் பொம்மைதான்.