பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நவராத்திரிப் பரிசு


ஒரு நாள் மாலை திடீரென்று ஆலயத்தில் சரசர வென்று எதையோ எழுதிக் கோவில் அதிகாரியிடம் கொடுத்து விட்டுச் சென்ருள் மந்தாகினி. பிறந்தது முதல் பிரிந்தறியாத மதுரையைப் பிரிந்து இரவில் வைகை யைக் கடந்து ரெயிலில் சென்று விட்டாள். காசியில் சத் திய விர கனைக் கண்டு அவனிடம் அடைக்கலம் புகுவது ; அல்லது இருக்கவே இருக்கிருள் கங்கை அடைக்கலம் அளிக்க என்ற எண் ண ம்.


சத்தியவிர தன் மதுரையிலிருந்து திரும்புவதற்குள் அவன் தந்தை பெண் பார்த்து வைத்திருந்தார். குமார னின் க்ல்வியைப் பற்றி நன்ருய் அறிந்த அவர், மங்கை மைந்தனுக்கு ஒத்தவளாக இருக்க வேண்டுமே என்கிற கவலையுடன் இருந்தார். பெண கவிதா சக்தி நிரம்பியவள். உள்ள த்தின் கம்பீரம் முகத்திலும் பிரதிபலித்தது. மந்தாகினியைப் போல் பேதை அல்ல. மந்தா கினி வியாகரணம், இலக்கியம், வேதாந்தம் முதலியவைகளே ப் படிக்கவில்லை. குறைவில்லாத பிரேமையை வேண் டியவள.


சத்திய விரதன் ஊருக்குத் கிரும் பியதும், ' என்ன சத்தியா மதுரை உன்னே க் கவர் க்துவிட்டதா? என் கனக் கட்ட் அடியோடு மறந்துவிட்டாயே. கான் கண்ணே மூடின பிறகு எங்கேயாவது போகலாம் ' என்றார் பி.கா.


இல்லை அப்பா ! மதுரையில் வேலே இருக்கிறது” என்று சிந்தனை யுடன் கூறினன்.


"உனக்குக் காசியில்தான்் வேலை. மதுரையில் இல்லே’ என்று மொழிந்தார் முதியவர்.


மந்தா கினியை மறந்துவிடுவதா? அந்தப் பேதை நெஞ்சம் எப்படி வாடுகிறதோ? அவளேயே மணந்து கொண்டால் என்ன ? தங்தையின் நியமம் அவர் ஒரு நாளும் ஒப்பமாட்டார். காதல் கருகிவிடுமே. தந்தை யின் பாசம் அறுந்துவிடுமோ? அவருக் கு என்னேக் கிருகஸ்தனக்கும் விருப்பம் தினம் அதிகரித்தே வரு கிறதே. மந்த்ா கினி ! நீ ஏன் தா சிகுலத்தில் பிறந்தாய் சீ”


இந்தக் குழப்பத்துடன் மணம் கடந்தது.