பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O


கல்யாணி


() னக்குச் சிறுவயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. புக்


ககத்தில் கிறைய மனிதர்கள். அவர்கள் என் இனக் கல்யாணத்தில் படுத்தி வைத்த பாட்டை கினைத்தால் பய மாகத்தான்் இருக்கிறது !


என் கணவருக்கு அந்தக் குடும்பத்தில் தனி மதிப்பு இருந்தது. தமிழ்ப் பத்திரிகைகளுக்குக் கதை எழுது வார். இதையெல்லாம் கினைத்தபோது எனக்குப் பெருமை அளவு கடந்து பொங்கிக்கொண் டிருந்தது. கல் யாணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மாடித் தாழ் வாரத்தில் திறந்த வெளியில் உட்கார்ந்துகொண் டிருக் தேன். என் மனம் அவரைப்பற்றித்தான்் கனவு கண்டு கொண்டிருந்தது. அசைவில் பார்த்த அழகிய உருண்டை முகம்; விசாலமான நெற்றி: அதில் விழுந்து புரளும் கூங் கல்: கண்களின் குறும்புத்தனத்தை மறைக்கும் கண்ணுடி. கதர் ஜிப்பா. நீ அதிருஷ்டசாலி' என்று என் மனமே எனக்கு நற்சாட்சிப் பத்திரம் அளித்தது.


இப்படி மெய்மறந்து இருந்தபோது என் கண்களைப் பின்புறமாக இரு கரங்கள் வந்து பொத்தி உணர்வு பெறச் செய்தன. குழந்தையின் கரங்கள்தாம்! வளை அணிந்த கரம். நீண்ட அழகிய விரல்கள். கைகளே விடு வித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தேன். அவருடைய சர்யலாகவே சிறுமி ஒருத்தி கின்றுகொண் டிருந்தாள். அந்தப் பெண் ஆச்சரியத்தால் வாயைத் திறக்தவண்ணம் என்&னப் பார்த்துவிட்டு, ' மன்னி, பாபு இதை உன்னி டம் கொடுக்கச் சொன்னன் ' என்ருள் ஒரு கடிதத்தை பிட்டியபடியே.


அவளைப் பிடித்து இழுத்து என் மடியில் உட்கார வைக் அக்கொண்டேன்.