பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நவராத்திரிப் பரிசு


o ' ஆமாண்டி கண்ணே ! உன் பெயர் என்ன?’ என்று கேட்டேன். கல்யாணி ' என்று கொஞ்சிக்கொண்டே சொல்லிற்று அந்தப் பெண்.


' அண்ணுவிடமிருந்து கடிதம் கொண்டு வந்தாயே, கான் இங்கே இருப்பது உனக்கு எப்படித் தெரிந்தது:”


கல்யாணி மோவாய்க்கட்டையில் கையை வைத்துக் கொண்டாள்.


' இது தெரியாதா மன்னி? பாபுதான்் பார்த்துச் சொன்னன். அதோ மொட்டை மாடியில் எங்காத்தி லிருந்து பார்த்தால் தெரியலேயா மன்னி?”


அவள் பேச்சும் குலுக்கும் என் மனத்தை மகிழ்வித் தன.


' அண்ணுவைப் போய்ப் பெயரிட்டுக் கூப்பிடுகிருயே. கூப்பிடக் கூடாதடி கண்ணே !' என்றேன்.


'பாபுவை அப்படித்தான்் கூப்பிடுவேன். உன்னே வேண்டுமானல் மன்னி என்று கூப்பிடுகிறேன் ” என்று பளிச்சென்று பதில் சொன்னுள்.


அவர் அனுப்பிய கடிதத்தைப் படிக்கக்கூட மனம் வராமல் அந்தப் போக்கிரிப் பெண்ணுேடு பேசுவதிலேயே காலம் போய்விட்டது. அவள் கையில் இரண்டு லட்டுக ளைக் கொடுத்து என்னை மீட்டுக்கொண்டேன்; என் உள் ளத்தை அல்ல.



பரிவுடன் கூடிய அவர் முகமும் கல்யாணியின் களங்கமற்ற முகமும் என்னேப் பிறந்தகத்தில் இன்பத் தில் ஆழ்த்தி வந்தன. கதை எழுதுகிறவர் அல்லவா? கடி தமும் கற்பனை ரசத்தில் தோய்த்தே எழுதப்பட்டிருக்கும். பாதி படிப்பதற்குள் ஒவ்வொரு சமயம் தலையை வலிக்க ஆரம்பித்துவிடும். கவரில் கொட்டை கொட்டையான எழுத்தில், ' சின்ன மன்னிக்கு கமஸ்காரம் ’என்ற வரிகள் என் கண்ணில் பட்டுவிட்டால், அவர் கடிதத்தை வைத்துவிட்டு, அந்த இளம் இருதயத்தின் கிர்மலமான வாக்கியங்களைப் படிக்க ஆரம்பித்துவிடுவேன்.