பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149


மன்னி, நீ சிக்கிரம் வந்துவிடு. யுேம் கானும் விளே யாடுவதற்காகப் பாபுவைத் தொங்க வு செய்து கேரம் வாங்கி வைத்திருக்கிறேன். என் சிநேகிதிகளிடமெல்லாம் உன்னப்பற்றியே சொல்லியிருக்கிறேன் ' என்கிற வரி களப் படிக்கும்போது கண்கள் மளமளவென்று ைேரப் பெருக்க ஆரம்பித்துவிடும். ' பாபுவை அப்படி க்கான் கூப்பிடுவேன் ' என்று அவள் உறுதியாகச் சொன்ன வார்த்தைகள் என் காதில் ஒலித்தன.


வருஷப் பிறப்பன்று அவருடன் அவள் வருவாள் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்த்ததற்கு மாருக என் தாயார் இறந்து போய்விட்டாள். அந்தப் பெரிய துயரில் மாப்பிள்ளை அழைப்பை மறக்கத்தான்் வேண்டி யிருந்தது. என் மனம் மட்டும் கல்யாணியைக் கற்பனே செய்து பார்த்து மகிழ்ந்துகொண் டிருந்தது. அப்பொ ழுது ஒன்பது, பத்து வயதாய் இருந்தவள் கொஞ்சம் உயரமாய் வளர்ந்திருப்பாள் என்று எனக்குள் எண்ணி மகிழ்ந்தேன். கல்யாணமாகி மூன்று வருஷங்கள் கழித்து அவர் என்ன அழைத்துப் போக வந்தார். அவர் வருவ தற்கு முன்பே பல கடிதங்களில் கல்யாணியை அழைத்து வர ச் சொல்லி எழுதியிருந்தேன். வாசலில் டாக்ஸி வங் ததும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அவர் மட்டும் இறங்குவதைக் கண்டேன். மனம் சஞ்சலப்பட்


• انگا۔--ا


' கல்யாணியை ஏன் அழைத்து வரவில்லை ? எழுதி யிருந்தேனே ' என்று கேட்டேன்.


என்னை விடக் கல்யாணிதான்் உனக்கு முக்கியமா ?” என்றார் அந்த எழுத்தாளர்.


இல்லை.........அவளேப் பார்க்கவேண்டும்போல் இருக்கிறது.”


ஊருக்குப் போனல் பார்க்கத்தான்ே போகிருய். அவள் நடுவில் வந்துவிட்டால் என்னே க் கூடக் கவனிக்க மாட்டாய் நீ ” என்றார் சிரித்துக்கொண்டே.


உண்மைதான்். அவர் வீட்டில் காலடி வைத்தவுடன் ஆரத்தித் தட்டுடன் அவளே எதிரில் வந்தாள். பருவத்