பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணி 151


என் தங்கையைப் பற்றி எனக்குத் தெரியும். இந்த இரண்டு கதைகளேயும் காப்பி செய்து அனுப்ப வேண் டும். தெரிந்ததா? நடுவில் கேரம் ஆடப் போனுல் அது வெங்ர்ே அடுப்புக்குப் போய்விடும். '


புருஷர்களின் ஆக்ஞை பிரமாதமானது அல்லவா? பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை' யாகக் கதைகளே எழுத ஆரம்பித்தேன். கல்யாணி நாளடைவில் என்னேப்பற்றிக் தவருக கினைக்க ஆரம்பித்தாள் .


' பாபுவின் அறையிலேயே ஐக்கியமாகிவிடுகிருயே மன்னி! நீ முதலில் இருந்த மாதிரி இல்லே ' என்பாள்.


கல்யாணி அன்று மலர்ந்த புஷ்பம்போல் விளங்கி ள்ை குதிப்பும் சிரிப்பும் போய் லஜ்ஜைப்பட ஆரம் பித்தாள். அவள் அண்ணு எதிரில் வரக்கூட அவளுக் குப் பிய மாதமான வெட்கம். ' கல்யாணிக்கு வயதாகி விட்டது பாபு. உன் ஆபீஸில் நல்ல வாகைப் பாரேன்” என்று அம்மா தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள். கடை யிெல் கல்கத்தாவில் வேலையாக இருந்த பிள்ளை ஒருவன் என் பொல்லாத கல்யாணியை ஏற்றுக்கொண்டான். மாப்பிள் ளே போவளிக்கு வந்தபோது கல்யாணியை வெளி யிலேயே பார்க்க முடியவில்லை.


பார்த்தாயா அவளே? உன்னே என்ைேடு தனியாகப் பேச விடமாட்டேன் என்றவள் அகத்துக்காரரைத் தனி யாக விடமாட்டேன் என்கிருள் ” என்றார் இவர்.


போவளி கழித்து மாப்பிள்ளே கல்யாணியைக் கூடவே அழைத்துக் கொண்டு போகவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார். ஊருக்குப் போகும் தினம் வந்தது. சிறுமியாய் என்னுடன் விளேயாடிய கல்யாணி தலை குனிந்து என் அறைக்குள் நுழைந்தாள்.


" மன்னி, பாபு இல்லையா இங்கே பாபுவுடன் பேசவிடாமல் உன்னே என்ன பாடு படுத்தி வைத்தேன் ? இப்பொழுதுதான்் தெரிகிறது மன்னி ; பாபுவுக்கு ஆசை எ ல்வளவு இருக்கிருக்கும் என்று. அதற்காக உன் பேரில் கூடக் கோபித்துக்கொண் டிருந்தேன். அதையெல்லாம்