பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

三之 重 பிரதி பலன்


IெTசுதேவன் ஆபீஸிலிருந்து வந்ததும் முக்கியமாகக்


கவனிப்பது ரோஜாச் செடியையும், அதில் எத்தனே அரும்புகள் இருக்கின்றன என்பதையுங்தான்். கெருக் கோடியை அடையும்போதே செழித்து வளர்ந் திருக்கும் அந்தச் செடியைக் கண்டு ஆனந்தப்பட்டுக் கொண்டே வருவான். அவன் இவ்வளவு அரும்பாடு பட்டு வளர்த்த செடி தன் போக்காகப் பக்கத்து வீட்டு இரும்புக் கிராதிமீது படர்ந்து செழித்திருந்தது. அங்க வீட்டில் வெகு காலமாக யாரும் குடி இல்லை. வழக்கும் வியாஜ்யமுமாய் அந்த வீடு கவனிப்பாரற்றுக் கிடந்தது. வாசுதேவனின் ரோஜாச் செடியும் தன் யதேச்சாதி காரத்தைச் செலுத்துவதற்கு இது உதவியாக இருந்தது.


காலையில் செடியில் மலர்ந்திருந்த புஷ்பங்களைப் பறித்துக்கொண்டு, மறுதினம் மலரப் போகும் அரும்பு களே எண்ணி வைத்துவிட்டு ஆபீஸ்-க்குப் போயிருக் தான்். மாலையில் திரும்பி வந்தபோது பக்கத்து வீடு திறந்து கிடந்தது. அதை அவ்வளவாகக் கவனியாமல் பாதி மலர்ந்து நகைபுரியும் ரோஜா மொட்டுக்களைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்தான்் அவன். சிவந்த ரோஜா மொட்டுக்களின் கடுவே வெள்ளே வெளே ரென்று இன்னெரு ஜாதிப் புஷ்பங்கள் தெரிவது என்ன அதிசயம் ? கவனித்துப் பார்த்தபோது இளங் கொடிகளில் அப்பொழுதுதான்் மலர்ந்த முல்லை மலர்கள் காணப்பட்டன. அந்தப் பொல்லாத முல்லைச் செடி இவ்வளவு சடுதியில் அவன் அருமைச் செடியைத் தழுவிக் கொள்ள ஆரம்பித்து விட்டது !


முல்கலச் செடி மதில் சுவருக்கு அப்பால் வைக்கப்பட் டிருந்த ஒரு பெரிய பூங்தொட்டியிலிருந்து முளைத்திருந் க.அ. இரும்புக் கம்பி வழியாக வாசுதேவன் அந்தத்