பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நவராத்திரிப் பரிசு


தொட்டியைக் கவனித்துச் சிந்தனையில் ஆழ்ந்தான்். ரோஜாச் செடியைச் சுற்றிக் கொண்டு அதை வளர விடாமல் தடுக்க முல்லைச் செடித் தொட்டியை யாரோ வைத்திருக்கிருர்கள் என்று கினைத்தான்். கையில் பாதி மலர்ந்த புஷ்பம் ஒன்றைப் பறித்து எடுத்துக்கொண்டு உள்ளே போய், அதைப் பூ ஜாடியில் வைத்துவிட்டு, ஈஸி சேரில் சாய்ந்தபடியே யோசனையில் ஆழ்ந்தான்் அவன்.



பக்கத்து வீட்டு அறையிலிருந்து ஒரு பெண் உருவம் குதித்து ஒடி வந்தது. ஒகோ அடுத்த வீட்டில் யாரோ குடி வந்திருக்கிரு.ர்கள் போல் இருக்கிறது என்று கினைத் தான்் வாசு. குறும்பு தவழச் சிரித்துக்கொண்டே முல்லேப் புஷ்பங்களைப் பறிக்க அந்தப் பெண் ஒடி வங்தாள். அவள் புஷ்பங்களைப் பறிக்கும்போது சிவப்பு ரோஜா அவள் திருஷ்டியைக் கவர்ந்தது. சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே அதை இலேயோடு திருகி எடுத்துத் தலையில் செருகிக்கொண்டாள். கருங் கூந்தலுக்கு அந்தச் சிவப்பு கிறம் பொருத்தமாய் இருந்தது. வாசு தேவன் இதையெல்லாம் பார்த்துப் பல்லேக் கடித்துக் கொண்டான். முன் பின் தெரியாத இடத்திலிருந்து பூவைத் திருகி வைத்துக்கொண்டு போக எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும் ? முல்லைப் புஷ்பங்களே மடியில் வைத்துக்கொண்டு உள்ளே ஒடிப் போய்விட் டாள் அவள். வாசுதேவன் வெளியே வந்து மெதுவாக முல் லேக் கொடிகளே ஜாக்கிரதையாக ரோஜாச் செடியை விட்டுப் பிரித்து எடுத்துத் தொட்டியில் விட்டுவிட்டான். அவள் ஜன்னல் வழியே பார்த்துக்கொண் டிருங் தாள.


வாசுதேவன் அவள் நிற்பதைக் கவனிக்கவில்லே. அன்றைத் தினத்திலிருந்து அவனேக் கவலே பிடித்துக் கொண்டது. தான்் ரோஜாவை வளர்க்கப் பகீரதப் பிரயத்தனம் செய்ததும், அது புஷ்பிக்கப் போகிறதா என்று எங்கினதும் அவனுக்கல்லவா தெரியும் : மனத்துக் குப் பிடித்த வஸ்துவை, இங்தா எடுத்துக்கொண்டு போ’ என்று யார் கொடுத்து விடுகிருர்கள் ?