பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிாதி பலன 155


காலையில் எழுந்தவுடன் செடியண்டை போய்ப் பார்த் தான்். என்ன ஆச்சரியம் முல்லைக் கொடி கள் முன்னே விட அதிகமாக ரோஜாவின்மேல் படர்ந்திருந்தன. அவன் ஆத்திரத்துடன் பல்லேக் கடித்தான்். சி! ஒரு பெண் ணுைக்கு இவ்வளவு துணிச்சலா? திரும்பவும் கொடிகளைத் தொட்டியிலேயே எடுத்து விட்டான். அவள் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டே இருந்தாள். அப்பொழுதும் அவன் அவளேக் கவனிக்கவில்லை. பிறகு அவசரமாக ஆபீஸ்-க்குப் போய்விட்டான்.


畢 를 皋


பத்துத் தினங்கள் வரையில் இவன் முல்லேக் கொடி களைப் பிரித்து விடுவதும், அவள் அதை மறுபடியும் பட ர விடுவதுமாகப் போட்டி போட்டுக்கொண் டி ருங் தனர். கேவலம் இதை ஒரு பொருட்டாக எண்ணி அவ ளுடன் சண்டை போடுவதும் அமுகல்ல என்று தோன்றி யது அவனுக்கு. பெரியவர்களிடம் சொல்லுவதைவிட அவளுக்கே தனியாய் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்துக்கொண்டான். ஒரு நாள் ரோஜாச் செடியில் முள் நிறைந்த கிளேகளே முல்லைச் செடியோடு சேர்த்துக் கட்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்். அந்தப் பொல்லாத பெண் வழக்கம் போல் வாசுதேவனின் புஷ்பங்களைத் திருட வந்தாள். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு அவசர அவசரமாகப் பற்றிக்க ஆரம்பித்தாள். பாவம் ! ஐந்தாறு முட்கள் சேர்க் காற்போல் விரல்களில் கீறி விட்டன. ரத்தம் குபுகுபு வென்று வந்தது. அவள் முகம் சிவந்தது. கையிலிருந்த புஷ்பங்களை வீசி எறிந்துவிட்டு விக்கி விக்கி அழுது கொண்டே உள்ளே போளுள். வாசுதேவன் மனத்திற் குள் சொல்லிக்கொண்டான் : “ பக்கத்து வீட்டில் பாடு ப்ட்டுச் செடி வளர்க்கிறது ஒருத்தன். இவள் ஆடிக் கொண்டே வந்து பறித்துக்கொண்டு போகிறது! வேண்டும் மன்ருய் ' என்று. இப்படி இவன் கினேத்துக்கொண்டு இருந்தபோது அடுத்த வீட்டில் யாரோ இரையும் சப்தம் கேட்டது. ஆமாம், உனக்கு எத்தனை தடவை சொல் துகிறதடி ருக்மிணி : யாரோ எவனே அங்கெல்லாம்