பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவராத்திரிப் பரிசு ن) رة 1


வம்புக்குப் போகாதே என்று ?" என்று அந்தப் பெண் னின் தாயார் கத்தினள். இன்னும் கொஞ்ச நேரம் கழித்து, ' போடீ அழுதுகொண்டு கிற்கிருய்” என்று மேலும் கோபித்துக்கொண்டாள். வாசுதேவன் மனத்தை என்னவோ செய்தது. பாவம் ரொம்பக் காயம் பட்டு விட்டதோ என்னவோ? என்ன முட்டாள் காரியம் செய் தோம்?’ என்றெல்லாம் கினேத்துக்கொண்டான்.


>}: Fo


வாசுதேவன் இயற்கை ரஸிகன். கண் ணுக்கு இனிமை தரும் பசுமையைப் போற்றி வளர்ப்பான். அவன் இருந்த வீடு சிறியதாய் இருந்தாலும் சுற்றிலும் செடிகள் வைத்திருந்தான்். ஒழிந்த வேளைகளில் தோட்ட வேலை செய்துகொண்டே இருப்பான். செடியிலிருந்து அநாவசி மாக ஒர் இலையை யாராவது பறித்துவிட்டாலும் கோபம் வந்துவிடும்.


மேஜைமேல் வைத்திருந்த பூஜாடியில் புஷ்பங்கள் குலுங்கின. நாளேயிலிருந்து இன்னும் வேண்டிய புஷ்பங் கள் ஜாடியில் குலுங்கும். ருக்மிணி கையில்தான்் காயமா யிற்றே. அந்த கினேவில் இருந்தபோது, ருக்மிணி தயங்கியபடியே உள்ளே வந்தாள். அவன் ஆச்சரியத்தால் அவளே உற்றுப் பார்த்தான்். அவள் தலையைக் குனிந்து கொண்டே, ' இனிமேல் உங்கள் ரோஜாச் செடியின் ஜோ லிக்கு நான் வரப்போகிறதில்லை. இத்தனை நாள் செய்த தப்புக்கு என்னே மன்னிக்க வேண்டும் ' என்று இரண்டு கைகளையும் கூப்பிள்ை. கூப்பிய கரம் ஒன்றின் விரல்களில் துணி சுற்றப்பட்டிருந்தது. அதன்மேல் செவேலென்று ரத்தக் கறை படிந்திருந்தது. வாசுதேவன் திடுக்கிட்டான்.


" ஐயையோ ரொம்பவும் கிறிவிட்டதா என்ன ?' என்ருன். ருக்மிணி சிரிப்பை வரவழைத்துக்கொண்டாள். இல்லை, இல்லை, கான் செய்த தப்புக்குச் சரியான தண்டனைதான்்’ என்ருள்.


" நீ என்ன அப்படித் தப்புச் செய்துவிட்டாய் ’’’ என்று அவளே உருக்கத்தோடு கேட்டான்.