பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நினைப்பும் நடப்பும்


GTಣ தடவையாக என் கணவர் என்னைக் கேட் - டார். பெண் கன்ருக இருக்கிருள் என்ரு சொல்லுகிருய்?' என்று. "ஆமாம்” என்று என் அபிப்பி ராயத்தை ஊர்ஜிதப்படுத்தினேன். ' எங்த விதத்தில்?” என்று மறுபடியும் கேட்டார் அவர். காங்கள் பெண்ணைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்துகொண் டிருந்தோம்.


மா கிறம், எடுப்பான மூக்கு, நீண்ட விழிகள். அவை கள் துறுதுறுவென்று பெண்ணின் புத்திசாலித் தனக் தைக் காட்டின. கா தில் எல்லோரையும் போல் ஜிமிக்கி சுடர் விட்டது. பெண்ணேப் பார்க்கிறவர்கள் மொத்தத் தில் நன்ருக இருக்கிருள் என்றுதான்் அபிப்பிராயப்படு வார்கள்.


என் மைத்துனருக்கு வந்திருந்த ஜாதகங்களில் இங் தப் பெண்ணின் ஜாதகம் கன்ருகப் பொருந்தி இருப்ப தாகவும், எங்கள் இருவரையும் போய்ப் பார்த்துவிட்டு வரும்படியும் என் டிைத்துனர் நாகராஜன் எழுதியிருந் தார். நாகராஜன் நல்ல அழகு. அவரை மனப்பவள் அதிருஷ்டசாலி என்றுதான்் சொல்லவேண்டும். வீட்டில் நாகராஜன், நான், என் கணவர் எல்லோரும் சேர்ந்து இருக் கும்போது வேடிக்கைக்காக அவர் வாயை நான் கிளறு வது வழக்கம். ' உங்களுக்கு மனைவி எப்படிக் கிடைக் தால் தேவலே?" என்று கேட்பேன். உடனே அவர் புன் னகையோடு ஆரம்பிப்பார்.


" சிவப்பாக, அழகாக, படித்த, சங்கீதம் கன்ருகத் தெரிந்த, குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணுகக் கர்வமில்லா மல் கிதான் புத்தியோடு.........”


" சர்வ லகூடிணமும் பொருந்திய கன்னிகை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாமே?” என்பேன்.