பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

நவராத்திரிப் பரிசு

கொண்டேன். இப்பொழுதே இங்கே விட்டு விட்டுப் போனார்களானால் பள்ளிக்கூடத்தில் சேர்த்து மேலே படிக்க வைக்கலாம். பாட்டும் சொல்லித்தரலாம். கேட்டுப் பாரேன், மன்னி” என்றார் பேச்சில் ஸ்வாரஸ்யம் இல்லாமல்.

“ இப்பொழுது இப்படித்தான் சொல்லுவீர்கள். பழகப் பழக விமலாவின் பேரில் உயிராக இருக்கப் போகிறீர்கள்" என்றேன்.


“அதெல்லாம் ஒன்றும் இல்லே. படிப்பும் பாட்டும் இல்லாமல் அவள் பொம்மைமாதிரி இருந்தால் எனக்குப் பிடித்துவிடுமா?” என்றார்.

மூன்று வருஷங்கள் கழித்து மறுபடி என் மைத்துனரையும் விமலாவையும் ஒரு பெண் குழந்தையுடன் பார்க்க நேரிட்டது.

“பள்ளிக்கூடத்தில் சேர்ந்து எத்தனை வகுப்பு வரையில் வாசித்தாய்?” என்று கேட்டேன் விமலாவை.

"விமலா கலீரென்று சிரித்துவிட்டு, வீட்டுக்கு வரும் பத்திரிகைகளையே வாசிக்க ஒழியவில்லையே! பள்ளிக்கூடந்தான் இல்லாமல் குறைவாக இருக்கிறது” என்றாள்.


“அவள் சோம்பேறி, மன்னி” என்றார் நாகராஜன்.


“ஆமாம்; வீட்டு வேலைதான் எனக்குச் சரியாக இருக்கிறதே. உங்கள் துணிமணிகளேயாவது சரியாக வைத்துக்கொள்கிறீர்களா?” என்று அவனேயே மடக்கினாள் விமலா.

“பாட்டும் அவ்வளவுதானா? போகட்டும், ரஜனிக் காவது பாட்டுச் சொல்லி வையுங்கள்” என்றேன்.

“அவள் எங்கே பாடுகிறது? ரஜனிதான் முகாரி பாட ஆரம்பித்துவிடுகிறாளே? ” என்று மனைவிக்காகப் பரிந்து பேசினார் நாகராஜன்.

மற்ற விஷயங்கள் எப்படி இருக்தாலும் பொதுவாக எல்லா நற்குணங்களும் விமலாவிடம் இருந்தன.

இவை போதாவா ஒரு பெண்ணுக்கு?

முற்றும்