பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நவராத்திரிப் பரிசு


தன் பெண்ணே இந்த ராம பக்தனுக்குக் கொடுக்க முன் வந்தார். கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. கிருஷ் ணனின் மனைவி ஸ்வர்ணம் அசல் ஸ்வர்ணம்தான்். தன் பர்த்தாவின் மனம் கோணமல் கடந்து, அவன் எழுதும் சித்திரங்களுக்கு உடனிருந்து ஏதாவது திருத்தங்கள் சொல்லுவாள்.


" பிள்ளை சரியில்லே' என்ற ஏக்கத்தால் அத்தையும் அத்திம்பேரும் அடுத்தடுத்துச் சில வருஷங்களில் இறந்து விட்டார்கள். ஊரிலிருந்த நிலம் புலன்களில் வரும் வரும் Loto- லாபமா கஷ்டமா என்பதை யும் கவனிக்காமல் பூரீ ராமன் கதையைச் சித்திரமாக வரை வதையே தொழி லாகக் கொண்டான் அவன்... . . ... 'என்று சொல்லிக் கொண்டே சாஸ்திரிகள் படத்தைப் பார்த்து யோசனையில் ஆழ்ந்தார்.


அந்தப் படங்களெல்லாம் இப்பொழுது எங்கே?' என்று ஆவலுடன் கேட்டேன்.


பொறு அம்மா! இந்தத் திவ்வியமான படம் அமைய இருக்கும்போது, அவைகளேக் கேட்ட நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டான். அவர்கள் வாழ்க்கைப் பாலத்தை இன்னும் பலமாக இனக்கும்படி குழங்கை ஒன்றும் இல்லை ஸ்வர்ணத்திற்கு அது பெரிய குறையாகத்தான்் இருந்தது.


  • -


'அந்த வருஷம் புரீ ராமநவமி உத்ஸவம் வழக்கம் போல் ஆரம்பமாயிற்று. கிருஷ்ணன் அகத்தில் ராமாய னக் காலகேஷபமும் ஆரம்பமாயிற்று. கம்பனின் கவிதைச் சுவையை ஊரில் உள்ளவர்கள் அநுபவித்தார்கள். ஆனல் புராணிகருக்கு அடுத்தாற்போல் இருக்கும் அறையில் கிருஷ்ணன் உட்காாந்து புராணிகர் ஒவ்வொரு கவி தையையும் விளக்கிச் சொல்லும்போது மெய்ம்மறந்து கை என்ன எழுதுகிறது என்பது புரியாமலே கவிதை இன் பத்தில் கடைங் தெடுத்த அநேக ஒவியங்களேத் திட்டி ஞன். சித்திரங்கள் ஒன்றை ஒன்று வென்று விடும்போல் களே சொட்ட அமைந்திருந்தன. -