பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனைக் கணவன் 29


வீட்டில் சகலமான வேலைகளேயும் அவளே செய்வாள். பெற்ருேளிடத்தில் அத்தியந்த பக்தி. ஆனல், அவள்


மனம் ஏதோ ஒரு பெரிய அதிர்ஷ்டத்தை தாடி அவ. ளுடைய பதினேந்தாவது வயதிலிருந்து திரிந்துகொண் டிருந்தது. எதிர்வீட்டு மீனுவின் கணவன் பட்டதாரி: பட்டணத்தில் நூறு ரூபாய் சம்பளம். அண்டை வீட்டுக் குங்தளத்தின் கணவன் பம்பாயில் வேலேயாக இருக் கிருன்.


குந்தளம் வந்து இறங்கும்போது, அவள் முகத்திலும் அவள் பெற்றேர்களின் முகத்திலும் வடியும் உத்ஸாகத் தைக் கண்டு, தினக்கும் தொலைவிலேயே புக்ககம் வாய்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள் சம்பகம். ஆஜானுபாகுவாய், பெரிய படிப்பாளியாய், கை கிறையச் சம்பாதிப்பவனுய் ஒரு யுவன் அவளது கற்பனையில் வளர்ந்துவந்தான்். இரவு கண்களே மூடில்ை, ஊர் பெயர் தெரியாத அந்தச் சுங்கர புருஷன் அவளே மயக்கி வந்தான்்.


சாஸ்திரிகள், பக்கத்திலே அநேக வரன்களைப் பார்த்தார். வரன்களெல்லாம் ஊர் மணியமாகவும், பதினேந்து ரூபாய் சம்பளம் வாங்கும் குமாஸ்தாக்க ளாகவும் இருந்தார்களே தவிர, அவள் கற்பனையில் உருவான சுந்தர புருஷனைக் காணவே இல்லை.


ரங்களுதன் அவனே அவள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்ல்ை. மாநிறமாகத் தலேயில் கட்டுக் குடுமியுடன்! சுறு சுறுப்பு வாய்ந்தவன் ரங்கநாதன், சாஸ்திரிகளின் சிஷ்யன். அப்பாவைப்போலத்தான்ே, அவனும் வீடு வீட்ாகத் திரியவேண்டும் ஊரில் நல்லதும் கெட்டதும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லா விட்டால் பிழைப்பேது அவனுக்கு ' சம்பகத்தின் மனம் அவனைத் துச்ச்மாக உதறித் தள்ள ஆரம்பித்தது. ஆனல் ரங்கநாதன்iன் உள்ளமோ அவளே உயர்ந்த வஸ்துவாக எண்ணி, ஆனந்தத்தில் லயித்து வந்தது. ஜாடைமாடை யாக, சம்பகம், தீர்த்தம் கொடு; சம்பகம், பாடசாலை யைப் பெருக்கிவிடுகிருயா ?” என்று அவன் கேட்பான். சம்பகம் சுவரித்த முகத்துடன், “ ஏன் சீ தோன் கொஞ்