பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3() - நவராத்திரிப் பரிசு


சம் பெருக்கேன் ! எனக்கு வேறே வேலை இல்லையா ?” என்பாள். அவளுடைய இனிய குரலேக் கேட்டதே போதும் ரங்ககாதனுக்கு.


சாஸ்திரிகளின் மனைவி, சம்பகத்தின் விஷயமாக அவரை ஒயாமல் பிராண சீன வாங்க ஆரம்பித்தாள்.


" நான் என்னடி செய்யட்டும் ? உன் பெண் வாயைத் திறந்தால்தான்ே ? எவன் வந்தாலும்தான்் பதிலே இல்லையே !' என்றார்.


' அவளை என்ன கேள்வி காமாகப் பார்த்து நிச்சயம் பண்ணித் தொலைக்கவேண்டியதுதான்ே ?” என்ருள் மனே வி.


' சரிதான்்! இதிஹாஸம் புராணம் எல்லாம் படித்து விட்டு, வயதுவந்த பெண் ஃன இஷ்டமில்லாமல் எங்கே யாவது தள்ளச் சொல்கிருயா வேண்டாமடி அந்தப் பாவம் ' என்றார் சாஸ்திரிகள்.


பெற்றவர்களின் இந்தப் பேச்சு, சம்பகத்தின் மனத் தில் அம்புபோல் பாயும். ' அப்பா அழைத்துவங்க அடுத்த ஊர் மணியக்காரரையே பண்ணிககொண்டு விடலாமே ?” என்று கினேப்பாள். "ஐயோ, உயிர் உள்ள வரைக்கும் கிராமத்தை விட்டுப் பட்டணம் என்ற பேச்சே இல்லையே வேண்டாமடா ஈசுவரா! வெளியுலக சம்பந்த மில்லாத இந்த வாழ்க்கை வேண்டவே வேண்டாம்' என்று அடுத்த கணம் மனம் சலிப்பாள். சம்பகத்தின் மனம், அவளது கற்பனைப் புருஷனேயே பின்பற்றிச் சென்று கொண் டிருந்தது.


சம்பகத்துக்குத் தன்சீனப் பிடிக்கவில்லை. அவள் பெரிய இடத்தை விரும்புகிருள் என்று ரங்களுதன் தெரிந்துகொண்டான். கொல்லேயில் ஜலம் சேந்திக்கொண் டிருந்த சம்பகத்தை, அவன், ' சம்பகம் ! அடுத்த ஊர் மன்னியக்காரரை உனக்குப் பிடித்திருக்கிறதா ?' என்று கேட்டான்.


அவள் கெஞ்சில் மறைந்திருந்த துக்கம் குமுறிக் கொண்டு வெளியே வந்தது. “ எப்படி எனக்குப் பிடிக் கும், ரங்கா ? நீ பால்ய சிநேகமாயிற்றே என்று உன்