பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 | நவராத்திரிப் பரிசு


மனைவி கூட வந்திருந்தாள். கதை எழுதுகிற பித்துக் குளியைப் போய்ப் பிடித்தாயேடா’ என்று கேலி செய் தாள். நீ வராமல் எனக்கு என்னவோபோல் இருந்தது.


(பிரபா பதில் பேசாமல் எழுதிக்கொண் டிருக்கிருள்.)


ராம : (வேடிக்கையாக அவள் பேனவைப் பிடுங்கிக் கொள்கிருன்) நீ என்னுடன் சரியாகப் பேசில்ைதான்் பேளுவைத் தரமுடியும். இல்லாவிட்டால் முடியாது.


பிரபா:பேசாமல் இருக்கிறேன? எழுதும்போது தொந் தரவு செய்யாதீர்கள். கதை வேண்டுமென்று அவர் கேட் டிருக்கும்போது தாமதப்படுத்துவது மரியாதையா !


ாம (கொஞ்சலாக) உன்னேப்போல் அழகான மனைவி அவருக்குக் கிடைத்திருந்தால், ஆசிரியர் உத்தி யோகம் செய்யமுடியாது, தெரியுமா? உலகத்தில் எதை யும் கவனிக்காமல் அவளேயே பார்த்துக்கொண்டு உட் கார்ந்து விடுவார்.


(அவன் பேசிக்கொண் டிருக்கும்போது, பேணுவை விரல் இடுக்கிலிருந்து பிரபா எடுத்துக்கொள்கிருள். பிறகு சிரித்து விட்டு, எழுத ஆரம்பிக்கிருள்.)


ராம : (சற்றுக் கோபமாக) கான் ஆபீஸிலிருந்து வரும்போதெல்லாம், கதை, கதை எழுத்து, எழுத்து!’ கொஞ்ச நேரமாவது உல்லாசமாக இருக்க முடிவ தில்லை. து.ா!


பிரபா , ஏன் கோபித்துக்கொள்கிறீர்கள் கல்யாணம் ஆவதற்குமுன் என்னிடம் என்ன சொன்னிர்கள்? உன் கதைகளைப் பத்திரிகைகளில் படித்து மயங்கிவிட்டேன்’ என்று சொன்னிர்களே. நான் மட்டும் அதைக்கேட்டு மயங்கிவிடவில்லே. கதை எழுதும்போது தொங்தரவு பண் ணக்கூடாது ' என்று வாக்குறுதிவேறு வாங்கியிருக்கி றேன்.... ஹஅம்... தெரியுமா?


ராம : தெரியும், தெரியும், பிரபா! நீ பார்வைக்கு இளங் கொடியைப்போல் மிருதுவாக இருந்தாலும் உன் மனதுமட்டும் கல்லேவிடக் கடினமாக இருக்கிறது. எப் பொழுதுமே வெளி அழகைக் கண்டு மயங்கக்கூடாது.