பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நவராத்திரிப் பரிசு


' ஹா! நிஜமாகவா ?’ என்று உரக்கக் கேட்டான் நீலகண்டன்.


" ஆமாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். அதல்ைதான்் அவள் உங்கள் எதிரில்வர வெட்கப்படுகிருள். மனிதர்களைக் கண்டால் பயம் இல்லை; வெட்கங்தான்். அதுவும் படித்தவர்களேக் கண்டால் எதி ரில் வரவேமாட்டாள்.”


' என்ன துரதிருஷ்ட ம்!”


' என்ன செய்வது? எங்கள் அப்பா எப்பொழுதும் அவ8ளப்பற்றித்தான்் வேதனைப் பட்டுக்கொண்டிருக் கிருர்’ என் ருன் வேணு.


நீலகண்டன் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருங் தான்். சட்டென்று ஏதோ முடிவுக்கு வந்தவன் போல், " வேணு ! அப்பாவை என் வீட்டிற்கு அனுப்பு. இல்லாவிட்டால் நீ வந்து கூப்பிட்டால் நானவது வரு கிறேன் ” என்று சொல்லிவிட்டுப் போனன்.


வேணுவின் தகப்பனர் நீலகண்டனைத் தேடிக் கொண்டு போர்ை. அவருக்கு நீலகண்டன் மனத்தை அறிந்ததும், ஆச்சரியமாகப் போய்விட்டது.


  • மனப்பூர்வமாகத்தான்் சொல்லுகிருயா ?’ என்று கேட்டார் அவர்.


"ஆமாம், அன்று ரெயிலில் பார்த்தபோதே என் மனம் அவளுக்கு வசமாகிவிட்டது. அவள் அன்று ஒரு வார்த்தை கூடப் பேசாதபடியால் என்னுடைய அன்பு குறைந்து விடவில்லை. இனிமேல் அவள் பேசாதிருப்பதற்காகவும் குறைந்துவிடாது ' என்ருன் நீலகண்டன்.


சுதாவின் தகப்பனர் அவன் கைகளைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு, சுதாவின் பொறுமைக்காகவே பகவான் அவளுக்கு இரங்கிவிட்டார் என்று கினேக் கிறேன்” என்று தழு தழுத்த குரலில் சொன் னர்.


பத்துத் தினங்களுக்கு அப்புறம் முன்போலவே நிலவு பொழியும் வனப் பிரதேசத்தில் சென்னையிலிருந்து பம்பாய்க்குப் போகும் ரெயிலில் சுதாவும் நீலகண்டனும் ஆனந்தமாகப் பிரயாணம் செய்துகொண் டிருந்தார்கள்.