பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நவராத்திரிப் பரிசு எழுதிக் கேட்டிருந்தான்். பார்த்தாயா, ரோஸ் என் கணவர் என்னிடம் எவ்வளவு சலுகை காட்டுகிருர்! நீ என்னவோ சொன்னயே ?' என்று சொல்லிச் சங் தோஷப்பட்டாள் சீதா.


தீபாவளிக்குத் துரைசாமியும் அவன் தாயாரும் வங் தார்கள். நாட்டுப் பெண்ணுக்கு வேளை க்கு ஒரு டி ரஸ் செய்து பார்க்கவேண்டுமென்று மாமியார் ஆசைப்பட் டாள். அந்தச் சமயங்களில், "இருங்கள் அம்மா, என் சிநேகிதிக்கு இந்தப் புடைவையைக் காட்டி விட்டு வந்து விடுகிறேன்’ என்று புடைவையை எடுத்துக்கொண்டு ஒடு வாள் சீதா. அங்கே போனல் இருவரும் பேச்சில் லயித்து விடுவார்கள்.


இந்த விஷயம் சீதாவின் மாமியாருக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. மாமியார் விஷயமாவது வேறு. துரைசாமி எப்பொழுதும் சீதா தன்னுடனேயே பேச வேண்டும், தன் எதிரிலேயே இருக்கவேண்டும் என்று விரும்பினன். ஒடி ஒடிப் போய்விடுகிருயே? கொஞ்சம் தான்் என் பக்கத்தில் உட்காரேன்” என்று சீதாவைப் பார்த்துச் சொல்வான் துரைசாமி.


' எங்கேயும் ஒடிப் போகவில்லை. என்னுடைய சிகே கிதி ரோஸ் மேரியுடன்தான்் பேசிக்கொண் டிருந்தேன். உங்களுடன் வந்துவிட்டால் அவளுடன் தினம் தினம் பேச முடியுமா?’ என்று கேட்டாள் சீதா.


இவ்விதவாக, துரைசாமிக்கு ரோஸ் மேரியிடம் ஒரு மாதிரியான கோபமும் வெறுப்பும் ஏற்பட்டிருந்தன. அவள் வரப்போ கிருள் என்று கேட்டதும், அவை இன் னும் அதிகமாயின.


  • --


மறு தினம் காலையில் ரோஸ்மேரி வந்து சேர்க் தாள். சிநேகிதிகள் இருவரும் சந்தோஷம் தாங்காமல் ஆனந்தக் கண்ணிர் பெருக்கினர்கள். சீதாவை ரோஸ் மேரி அன்புடன் அணைத்து, "சீதா ரொம்பவும் மாறிவிட் டாயே; கொஞ்சம் பெருத்துக்கூட இருக்கிருயே! உன்