பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நவராத்திரிப் பரிசு


னித்தேன். ராசுமணி இல்லாமல் அவர் மிகவும் கஷ்டப் படுவதாகவே எனக்குத் தோன்றியது.


" நான் சொன்னதைக்கூடக் கவனியாமல் அவசரப் பட்டுப் போகச் சொல்லிவிட்டீர்களே?’ என்றேன்.


' அவசரமாவது? கோட்டை பிரஷ் செய்து வை என்றால் பத்து ரூபாயைத் திருடுவது என்று அர்த்தமா? அவனைத்தவிர வேறு யார் எடுத்திருப்பார்கள்? மாடிப் பக்கம் வேலைக்காரியோ வருவதில்லை! ” என்றார் அவர் கோபத்துடன்.


--


முதல் நாள் எங்களுக்குள் ஏற்பட்ட மன ஸ்தாபம் இதுதான்் :


வழக்கம்போல் ராசுமணி மாடியைச் சுத்தம் செய்து விட்டுத் துணிமணிகளே ஒழுங்காக மடித்து வைத்துக் கொண்டிருந்தான்். மார்க்கெட்டுக்கு அனுப்பலாமென்று மாடிக்குப் போனேன். ' அவனுக்கு இன்று அதிக வேலை இருக்கிறது. கோட்டைப் பிரஷ் பண்ணவேண்டும். இருக் கிற கறிகாயை வைத்துக் கொள்” என்று உத்தரவிட் டார். இவர்.


ஆபீஸ்-க்குக் கோட்டைப் போட்டுக்கொண்டு போன வர் ஒரு மணி நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து கோட்டுப் பையில் வைத்த பத்து ரூபாயைக் கானேம்" என்று வீடு பூராவும் தேடி னேர். ராசுமணியைக் கூப் பிட்டு கயமாகக் கேட்டார்.


'இல்லை ஐயா! கோட்டில் பணம் இருந்ததோ என்னவோ, நான் பார்க்கவில்லை” என்ருன்.


' நான்தான்் வைத்தேன் என்கிறேன்; நீ இல்லை என் கிருயா? பணம் கால் முளைத்து நடந்து ஒடி விட்டதா ?” என்று இரைய ஆரம்பித்தார். ராசுமணி கண்ணில் ஐலம் பெருக கின்றுகொண் டிருந்தான்்.


' உண்மையைச் சொல்லி விடு : இரண்டு ரூபாய் இனம் தருகிறேன் ' என்று ஆசைகாட்டிப் பேசினர்.