பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

பொட்டுக்களை ஒன்று சேர்த்ததும், கண்ணைக் கவரும் உருவம் தோன்றுகிறது, சிறுகதை எழுதுகிறவனும் இந்த மாதிரி ஜால வித்தையில் கைதேர்ந்த கவிஞனாக இருக்க வேண்டும்.

இந்தத் தொகுதியில் உள்ள கதைகளைப் படிக்கிறவர்கள், மேலே சொன்னதை உரைகல்லாக வைத்துக் கொண்டு அவற்றை மதிப்பிட முயலக் கூடும்.

இக் கதைகளில் பல, அவை பத்திரிகையில் வெளியாவதற்கு முன்பே, எழுத்துப் பிரதியிலேயே நான் படித்தவை. பத்திரிகையில் வெளியான போது படித்தது இரண்டாவது தடவை. இப்பொழுது முகவுரை எழுதுவதற்காக மூன்றாவது தடவையாகப் படிக்கும்போதும் அவை சுவை குன்றாமல் இருக்கின்றன என்று நான் உ.றுதியாகக் கூறக் கூடும்.

மனிதர்களின் ஆசா பாசங்களையும், விருப்பு வெறுப்புக்களையும், வாழ்க்கையின் சிக்கல்களையும் ‘நவராத்திரிப் பரிசு’, ‘கற்பனைக் கணவன்’, ‘பாகீரதி’, ‘மீனாக்ஷி’ முதலிய கதைகள் எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டுகின்றன! கலைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணம் செய்த பரமபக்தனின் கதையைச் சொல்லாம் ‘வரப் பிரசாதம்’, ‘ஓடக்காரி’, ‘சிலா போகம்’ (முதலிய கதைகள் சிறந்த கதை அமைப்புக்கு உதாரணங்கள். ‘சிலா போக’த்தைப் படித்து முடித்ததும் உயர்ந்த கவிதையைப் படித்த பிரமையே மனசில் உண்டாகிறது. கவிதைக்குரிய கம்பீரமும், சொல் நயமும், பொருள் நயமும் அதில் துள்ளுகின்றன.

“திருச்சியில் மேலச் சிந்தாமணியில் ஒரு சுப்பிரமணிய ஸ்வாமியின் கோவில். அது அந்தப் பக்கத்துக்கே மிகுந்த சோபையைக் கொடுத்து வந்தது. கோவில் சிறியதுதான். ஆனால், அதில் இருந்த மூர்த்தி மட்டும் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொன்னார்-