பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

கள். கோவிலைச் சுற்றி அழகிய தோட்டம். அதில் ரோஜா மல்லிகை மொக்குகள் மலர்ந்து கண்ணைச் சிமிட்டி மின்னின. அமைதியாகப் பவனி வந்த காவேரி ஆறும், கம்பீரக் கோயிலும் பார்க்கத் தெவிட்டாத, காட்சியாய் அமைந்தன.” — இப்படி ஆரம்பிக்கிறது ஒரு கதை.

“கபில தீர்த்தம், அதன் சுற்றுப்புறம் எல்லாம் பாகீரதியின் கதையைக் கவனித்துக் கேட்பதுபோல் அமைதியாக இருந்தன. ‘மாயனை மன்னு வட மதுரை மைந்தனை’ என்று பாகீரதி குளத்தில் ஸ்நானம் செய்ய ஆரம்பித்தாள்.

“நானும் குளிருக்குப் பயந்து நடுங்கிக்கொண்டே மெதுவாகத் தண்ணீரில் காலை வைத்தேன்.”

என்ன அழகான முடிவு! ஒரு விநாடி கண்ணை மூடிக்கொண்டால், கபில தீர்த்தம் நம் கண் எதிரே தோன்றுகிறது. குளிரினால் நம் உடலும் உள்ளமுங் கூடச் சிலிர்க்கின்றன. தமிழ் வசனத்திலே எவ்வளவு அற்புதமான சொற் சித்திரங்களைத் தீட்ட முடிகிறது? நாம் எல்லோரும் பெருமைப் படக்கூடிய விஷயங்தான் இது.

து. ரா.