பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நவராத்திரிப் பரிசு


வேணும் என்று ஆசைப்படுகிருள். அவள் ஆசையைக் கெடுப்பானேன்?’’


மீனகதி ஒரு மாதிரியாகச் சிரித்தாள். பிறகு, ' ஆசையைக் கெடுக்கக் கூடாது; வாஸ்தவக் கான். பிற் காலத்தில் அந்த ஆசை பரிபூரணமாக கிறைவேற வேண் டுமே. அதுதான்் கவலையாக இருக்கிறது. பெண் ஜன்மங் களுக்கு ஏதோ சுதந்தரம் கொடுத்துவிட்டதாகச் சிலர் பாவித்துக்கொண் டிருக்கிருர்கள். கிரிஜாவின் அபி லாஷை பூர்த்தியாவது அவள் கணவனிடங்கானே இருக் கிறது? குழந்தைக்கு ஆசையுடன் அற்புதமான வித் தையைப் போதிக்கிருய். பிற்காலத்தில் வீணே - என் விணே மாதிரி - புழுதி படிந்து மூலையில் கிடங்கால் அதை அப்பிய சித்தவருக்கு மனவருத்தந்தான்ே?' என்ருள் மீளுகவி.


களே பொருந்திய அவள் முகத்தில் வருத்தத்தின் குறி களும் சிந்தனைகளும் தோன்றின." கேள் அம்மா ! இந்த வீணை என்னுடையது. என் உயிரினும் இனிய பொரு ளாக இதை மதித்து கடந்துவந்தேன். ஏழு வயதில் இது என்னை அடைந்தது. இன்றைக்கும் என்னிடங்தான்் இருக்கிறது. அதனுள் இருக்கும் ஸப்தஸ்வரங்களேத் தட்டி ங்ாதத்தை வெளியிடும் யோக்கியதையும் எனக்கு ஏற்பட் டது. ஆனல் அதிர்ஷ்டம் என் விஷயத்தில் மோசம் செய்துவிடவே இந்த வாத்தியத்தை வருஷக் கணக்காகப் பெட்டியிலேயே வைக்கும்படி நேர்ந்துவிட்டது. நான் வீணே யைத் தொடுவதில்லை என்று தெரிந்து என் தகப்பனர் சாகும் வரையில் மனம் புழுங்கினர். அதெல்லாம் பழைய கதை. துரசு படிந்து வீனகி விடுமே; பார்க்கலாம் என்று வெளியில் எடுத்தேன்.


"அப்படி உங்களுக்குத் தடை விதித்தது யார் மீனகதி? மாமாவா? " என்று கேட்டேன்.


" சே சே, அவருக்குச் சங்கீதம் என்றால் உயிர். அது ஒரு கதை அம்மா. அவகாசமிருந்தால் சொல்லுகி றேன் கேள். தடை விதித்தவர் மண்னேடு மண்ணு கப் போய்விட்டார். ஆனால், மனிதன் செய்யும் தீமை, யும் நன்மையும் உலகத்தில் அவனுக்கு அழியாத பெயரை ஏற்படுத்தி விடுகின்றன. என் மாமனர் இறந்து பதினேங்து