பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


பார்வ தி


அதிகாலயில் சமையல் அறையில் டம்ளர்களின் சத்த மும், பரபரவென்று ஆள் நடமாடும் சத்தமும் கேட்க ஆரம்பித்தால் பார் வதி வேலை செய்கிருள் என் பதை அறிந்துகொள்ளலாம். பார்வதி எங்கள் வீட்டுக் காரியககாரி. பெயர் தான்் பெரிதாக இருக்கிறதே தவிர வயது ஒன்றும் அதிகமாக ஆகிவிடவில்லை: பன்னிய ண்டு தான்். என் மனைவி கல்யாணி. அவள் பிறந்தகத்திலி ருந்து ஒத்தாசைக்காக அவளே அழைத்துவந்திருந்தாள். தாயார், தகப்பனர் இரண்டு பேரும் அற்ற அனுதை. ஆள் அதிக நடமாட்டமில்லாத மருதன்பட்டி ரெயில்வே ஸ்டேஷனுக்கு என்னே ஒரு வருஷத்துக்கு மாற்றி இருந்தார் கள். மாற்றல் உத்தரவு வந்தபோது கல்யாணி பிரசவிப் பதற்காகப் பிறந்தகம் போயிருந்தாள். அவளுக்கு இந்த விஷ்யம் கடித் மூலமாகத் தெரிந்தபோது மிகவும் வருத் தப்பட்டு எனக்குப் பதில் எழுதியிருந்தாள். பிறந்த குழந்தையும் இறந்துவிட்டது. உங்களுக்கு மாற்றலாகி இருக்கும் ஊரும் லக்ஷணமாக இருக்கிறது. யாரும் இல் லாமல் தன்னந்தனியாக நான் மருதன்பட்டிக்கு வர வில்லை. இந்த ஒரு வருஷமும் இங்கேயே இருந்து விடு கிறேன்’ என்பதுதான்் கடிதத்தில் கண்டிருந்த விஷயம். கல்யாணியின் அபிப்பிராயத்துக்கு விட்டுக்கொடுக்க எண்ணி வேலையில் சேருவதற்குமுன் மருதன்பட்டிக்கு ஒரு தடவை போயிருந்தேன்.


ரெயில்வே ஸ்டேஷனைச் சுற்றி ஒரே மலைக்காடு. குன்றுகள் தெரியாமல் மூடி இருக்கும் மரங்களில் கட்டி யிருக்கும் தேனைச் சேகரிக்கும்பொருட்டுக் குறவர்கள் மலை அடிவாரங்களில் மாரி காலங்களில்தவிர எப்பொழு தும் கூடி இருப்பார்கள். சங்தனக் கட்டைகள் சேக ரிக்கும் தொழிலும் அவர்களுடையதுதான்். ஊரைச்