பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நவராத்திரிப் பரிசு


உடம்பு மிகவும் பல ஹீனமாக இருப்பதால் வேலை செய்ய வும் அந்தப் பெண் உதவியாக இருப்பாள் என்றும் எழுதி யிருந்தாள்.


மனத்திலிருந்த பெரிய சுமை நீங்கியது. ஒரு நாள் விடியற்க்ாலம் வந்த மெயிலில் கல்யாணியும், பார்வதியும் வந்து இறங்கினர்கள், குழந்தை இறந்துபோன துக்கம் அவள் மனத்தை விட்டு நீங்கிவிட்டதாகத் தெரியவில்லே. :: என்ன பண்ணுவது? நாம் கொடுத்து வைக்கவில்லே. மூக்கும், முழியுமாய் உங்களையே உரித்து வைத்திருந்தது.” என்று ஸ்டேஷனிலேயே குறைப்பட்டுக் கொண்டாள். அவள் பக்கத்தில் கின்றிருந்த பெண்ணும், வற-ம்' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே என் முகத்தைப் பார்த் தாள்.


இவளைப் பற்றித்தான்ே எழுதியிருந்தாய்?' என்று


கேட்டேன் கல்யாணியிடம்.


"ஆமாம்; பார்வதி இல்லாவிட்டால் நான் இங்கே வந்தே இருக்கமாட்டேன். அப்பாகூட இந்த ஊரில் இருபது வருஷங்களுக் குமுன் உத்தியோகம் பண்ணி இருக்கிரு.ராம். அது ஊரில்லே ஆழ்மா, காடு ' என்று இiபில் ஏறும்வரைக்கும் சொல்லிக்கொண் டிருந்தார்” என்ருள் கல்யாணி.


அவள் குற்றச்சாட்டைப் பொறுக்காமலோ என் னவோ காற்று ஒருதரம் சடசடவென்று வீசி நின் றது. ரெயில்வே ஸ்டேஷனில் வரிசையாக நின்ற சரக் கொன்றை மரங்கள் சடசடவென்று பனித் துளிகளே உதறின. அத்துடன் தேன் கலந்திருந்த ரகசியம் வண்டுக ளுக்கு மாத்திரந்தான்் தெரிந்திருக்க கியாயம். ஏனெனில், இவை உய்ய் என்ற ராகத்துடன் மரத்தடியைச் சுற்றின.


மெயில் இரண்டு ஸ்டேஷன்கள் தாண்டிப் போகும் மட்டும் நாங்கள் ஸ்டேஷனிலேயே இருந்திருக்க வேண்டும். அதிகாலை ஆறு மணிக்கு ரெயிலைவிட்டு இறங்கியவர்களை ஏ முரை மணிக்குத் சான் வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன். ரெயில்வுே ஸ்டேஷனுக்கு வெளியே கின்று பார்த்தால் இரு புறமும்