பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1

நவராத்திரிப் பரிசு

வராத்திரிக்குப் பத்துத் தினங்களுக்கு முன்னிருந்தே என்னைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தாள். அவள் தொந்தரவு பொறுக்க முடியாததாய் இருந்தது. 'இந்தப் பெண்ணோடு போய் ஏன் சிநேகம் வைத்துக் கொண்டோம்?' என்றும் சில சமயம் நான் நினைத்ததுண்டு. கௌரி எதிரகத்துப் பெண்; பத்து வயதிருக்கும். முப்பது ரூபாய் சம்பளத்தில் ஏழு ஜீவன்கள் பிழைக்கவேண்டும். மகாலட்சுமி - கௌரியின் தாயார் - இந்தக் காலத்து ஸ்திரீகளின் கோஷ்டியில் சேராதவள். ஊரில் எத்தனை 'பாஷன்' தலை விரித்து ஆடட்டும்; அந்த அம்மாளின் கொசாம் புடைவையும், தலை முடிச்சும், நெற்றியில் மதுரைக் குங்குமமும் சிறிதாவது மாறுதல் அடைய வேண்டுமே! கௌரி நல்ல சிவப்பு; தந்தம் மாதிரி உடம்பு; தலை நிறைய மயிர். பொதுவாக லட்சணமாக இருப்பாள். குணம் சௌஜன்யமானது. நவராத்திரி வருகிறதென்றால் அவளுக்கு மிகக் குதூகலம். அவர்கள் வீட்டிலும் கொலு வைப்பார்கள். மகாலட்சுமிக்கு அவள் பிறந்தகத்தில் வாங்கிக்கொடுத்த பொம்மைகள் வர்ணம் போயும் உடைந்தும் இருந்தன. ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தபோது, "நவராத்திரி வருகிறதே, ஒன்றும் ஏற்பாடு செய்யவில்லையா?" என்றேன்.

"என்ன செய்கிறது? பொம்மைகளெல்லாம்மூளியாகக் கிடக்கின்றன. பொறுக்கி எடுத்தால் இருபது பொம்மை கூடத் தேறாதுபோல் இருக்கே" என்றாள் மகாலட்சுமி.

"அதற்காகக் கொலுவைக்காமல் இருப்பதா? இருப்பதைக்கொண்டு குறைக்காமல் செய்யவேண்டியதுதான். பராசக்தி பூஜையாயிற்றே!'

"கௌரி சதா தொந்தரவு செய்கிறாள்.'இந்த வருஷம் புதுப் பொம்மை வாங்கம்மா பழசு வச்சா நான்