பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நவராத்திரிப் பரிசு


குளிக்கத்தான்ே போகிருய் ? போய்விட்டு வா' என்று உத்தரவிட்டாள் கல்யாணி.


எண்ணெய் தேய்த்துக்கொள்ளப் போகிறேன் அக்கா. மலைக்குகையில் அருவி இருக்கிறதாம். அங்கே போய்க் குளித்துவிட்டு வருகிறேன்.”


வேலை இல்லையா உனக்கு ? பாறை ஜலத்தில் ஸ்நானம் செய்துவிட்டுப் படுத்துக்கொள்ளாதே. இதை யெல்லாம் உனக்கு யார் கலகம் பண்ணுகிருர்கள் போடீ பைத்தியமே” என்று அதட்டிவிட்டுக் கல்யாணி சமையல் அற்ைக்குள் சென்ருள். பார்வதி சிறிது கேரம் யோசித் தாள், பிறகு சமையல் அறயை ஒரு பார்வை பார்த்து விட்டு மான் வேகத்தில் சந்தன மரத்தாடே ஒடி மறைக் தாள.


வேண்டாமென்று சொன்னயே. பார்த்தாயா? அந்தப் பெண் ஒடிவிட்டது” என்று நான் கல்யாணியிடம் சொன்னேன்.


வரட்டும் சனியன் 1 பிய்த்துக் கட்டி விடுகிறேன். ' என்ருள் கல்யாணி. மலே அருவியில் ஸ்நானம் செய்து விட்டு ஒரு கன்னித் தெய்வம் மாதிரி அள்ளி முடிந்த கூந்தலுட்ன் பார்வதி வீட்டுக்கு வந்தபோது மணி ஒன் பது. கல்யாணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.


  • ஏ அனதைப் பிணமே ! ஊரிலிருந்து அழைத்து வந்ததற்கு நல்ல பெயரைக் கொண்டுவந்து விட்டாய். போக்வேண்டாம் என்று சொன்னதைக் கேட்காமல் ஏன் போளுய் ?' என்று இரைக்தாள் கல்யாணி.


  • மலை அருவி குளுகுளுவென்று இருக்கு அக்கா ' என்று பார்வதி சம்பந்தம் இல்லாமல் பதில் சொன்னதைக் கேட்டுக் கல்யாணி பற்களை கறகறவென்று கடித்தாள்.


தினம் தவருமல் பார்வதி மலை அருவிக்குப் போவது வழக்கமாகிவிட்டது. rէ դi 6Ն குடைந்து ஸ்நானம் செய்துவிட்டு வந்த அந்த இன்பத்தை அவள் எங்கள் இருவரிடமும் விவரிப்பாள். மலே அருவிக்கு அருகில் வாசம் செய்யும் கன்னித் தெய்வத்தைப் பற்றி