பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நவராத்திரிப் பரிசு


செய்தால் நீயும் இடம் கொடுக்கிருயே ' என்றேன் கல் யாணி யிடம்.


நான் என்ன பண்ணுவது அடுத்த மாசம் ஊரில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுகிறேன்.”


பார்வதியின் முகம் வாடிவிட்டது. ஆனால், ஏதோ மந்திர சக்தியால் தாண்டப்பட்டவளைப்போல் மெதுவாகச் சந்தனமரங்களினூடே சென்ருள் பார்வதி. என் மனம் கேட்கவில்லை. அவளே அறியாமல் மலே அருவியை அடைந்து அதன் பாறையின் மறைவில் உட்கார்ந்தேன். காடன் குடும்பத்தார் கூட்டமாக வந்திருக்கார்கள். தேனும், தின மாவும், மான் இறைச்சியும், காட்டு மலர் களும் குவிந்திருந்தன.


பார்வதி ஸ்நானம் செய்து முடித்தாள். தன் மஞ்சள் குங்குமப் பெட்டியிலிருந்து குங்குமம் இட்டுக் கொண் ட்ாள். அழகிய கண்களால் ஒருமுறுை சுற்றிப் பார்த்து விட்டு, காடா !” என்று மலே கிடுகிடுக்கும்படி கத்தி ள்ை.


கூட்டத்தில் ஒருவன் சிலம்பு போட ஆரம்பித்தான்்.


ஏன் தாயே?’


நான் வந்திருக்கிறேன்.”


  • அம்மா !”


  • கொண்டு போகிறேன்.”


  • அம்மா, தாயே 1”


பேசாதே !' - பார்வதி பயங்கரமாக விழித்தாள்.


உங்கள் மங் திர தங்திரங்களால் பிராமணப் பெண்கண வஞ்சித்துவிட்டீர்கள். தஞ்சாவூரிலிருந்து வந்த இரண்டு மாதங்களுக்கெல்லாம் அவளேக் குறத்தி யாக்கி விட்டீர்கள். இனிமேல் அவளே இங்கே விடமாட் டேன்.”


ஐயையோ தாயே!” என்ருன் பூசாரி.


பார்வதி தடர்ரென்று விழுந்தாள். மூக்கிலும் வாயி அலும் ரத்தம் கசிந்தது.