பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நவராத்திரிப் பரிசு


பொருமை படர்ந்தது. இவ்வளவு காலமாக வகித்துவந்த பெரிய பொறுப்புப் போய்விட்டதே என்கிற எண்ணம் பொருமைக்குக் காரணமாக இருக்கலாம்; குடும்பத் தொல்லே விட்டதே என்று திருப்தியும் ஏற்பட்டிருக்க GUIT LID,


சுசீலா அந்த வீட்டுக்குள் நுழைந்து ஒரு நாள் ஆயிற்று. அடுத்த நாள் எழுந்திருந்தபோது மணி ஆற ரைக்குமேல் ஆகிவிட்டது. சமையல் அறையில் சந்தடி எதுவும் இல்லை. வள்ளியம்மைமட்டும் காபிப் பாத்திய ங் களைப் பளபள வென்று தேய்த்து வைத்திருந்தாள். வாலாம்பாள், வார்த்தையில் சொன்னதைக் காரியத்தி லும் கிறைவேற்றிவிட்டாள். சுசிலா, மெதுவாக யே மி அறைக்குள் எட்டிப் பார்த்தாள். பச்சைக் கம்ப எளியை இழுத்துப் போர்த்துக்கொண்டு வா லாம்பாள் கிம்மதியாகத் தாங்கிக்கொண் டிருந்தாள். சமையல் அறைக்குள் நுழைந்த சுசீலாவுக்கு எல்லாம் புதிதாக இருங் தன. காபிப்பொடி, சர்க்கரை முதலியவற்றைத் தேடி எடுப்பதற்குள் அரை மணி நேரம் ஆகிவிட்டது. காபியை எடுத்துக் கொண்டு வாலாம்பாள் அறைக்குள் நுழைந்த போது, அவள் அரைத் துாக்கத்தில் இருந்தாள்.


  • அம்மா !” என்று ஒருதரம் கூப்பிட்டாள்.


' எழுந்து விட்டாயா மணி ஏழு இருக்குமா ?” என்று கேட்டுக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். சுசீ லாவுக்கும் வயதான் ஒரு பாட்டி இருந்தாள். அவள் விடியற்காலமே எழுந்து ஸ்னைம், ஜபம், தபம் இவை களே முடித்துக்கொண்டு, மாட்டுப்பெண்ணுக்குக் - சுசிலாவின் தாயாருக்கு - கறிகாய் நறுக்கிக் கொடுப் பதைச் சுசீலா பார்த்திருக்கிருள். ஆனல், இம்மா திரி வீட்டுக்குள் ஒரு சிறு பெண் நுழைந்ததும், குடும்பப் பொறுப்பு அவ்வளவையும் அவள் தலையில் போட்டுவிட்டு ஏழு மணி வரையில் துரங்குகிற பழங்காலத்து மனுவுதியும் இருக்கிருள் என்பது அவளுக்கு ஆச்சரியமாகத்தான்் இருந்தது.


' என்ன சமைக்கிறது அம்மா ?”