பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 'நவவித சம்பந்தம் தாய்ப் பாசுரங்கள் : இவை ஈசுவர பாரதந்திரியத்தையும் அவனே உபாயமாகின்தான் என்பதையும் தெரிவிக்கின்றன. 'உபாயத்தில் துணிவு ஆகிற பிரஜ்ஞாவஸ்தைக்குத் (ஆசா. ஹிகு.:33, தாயார் என்று பெயர். திருமந்திரத்திலுள்ள "நம: பதத்தாலே இஃது அறியப் பெறுகின்றது. தாய்ப்பாசுரங்களை ஆழ்த்து கத்தால் இக்கருத்துத் தட்டுப்படும். சிலவற்றை ஆண்டுக்காட்டுவேன். {l} திருவாய்மொழியில் ‘மண்ணையிருந்து துழாவி'(4.4) என்ற திருப்பதிகத்தில், கோகன் ஆண்கன்றைப் புல்கிக் 'கோவிந்தன் மேய்த்தன' என்னும் பேம்இள நாகத்தின் பின்போய் 'அவன் கிடக் கையீ தென்னும்; ஆமள வொன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற ஆேகன வுல்லிaை: டிாயோன் மணல்செய்து செய்கின்ற கூத்தே (5) ! கோமளம்-இளமை, அழகு; கிடக்கை-படுக்கை, ஆம் அளவு-ஆகும் அளவு: மால்-மயக்கம் ! என்பது ஐந்தாம் பாசுரம், கண்ணபிரான் கன்றுகளை மேய்த்தான் என்பதறிந்த பராங்குசநாயகி,தெருவில் தெரிகின்ற பருவத்தால் இளையன வாய்ப் பெருத்திருக்கின்ற கன்றுகளைப் பிடித்து அனைத்துக் கொண்டு 'நம் கண்ணபிரான் மேய்த்த கன்றுகள் இவை என் கின்றாள். கோவிந்தன் பசுக்களையும், கன்றுகளையும் மேய் த்த பெருமைக்கு முடிசூடிவைன். பாம்பினைக் கண்டால் அஞ்சாமல் அதன் பின்னே ஓடி எம்பெருமானுடைய திருப்பள்ளி மெத்தை இது என்கின்றாள். அவனோடு கூடித்தானும் படுக்கலாம் என்ற ஆசையோடே நாகத்தின் பின்னே நடந்தால் போலும்